பொது செய்தி

தமிழ்நாடு

'கேங்மேன்' வேலை கேட்டு வாரியம் வந்த தேர்வர்கள்

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:'கேங்மேன்' எழுத்து தேர்வில் பங்கேற்றவர்கள், தங்களுக்கும் வேலை வழங்க கோரி, மின் வாரிய உயரதிகாரிகளிடம் மனு அளித்தனர். தமிழக மின் வாரியம், மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட கள பணிகளை மேற்கொள்ள, 'கேங்மேன்' என்ற பதவியில், 10 ஆயிரம் ஊழியர்களை, உடல்தகுதி மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்தது. இவர்களின் பட்டியல், நடப்பாண்டு பிப்ரவரி இறுதியில் வெளியிடப்

சென்னை:'கேங்மேன்' எழுத்து தேர்வில் பங்கேற்றவர்கள், தங்களுக்கும் வேலை வழங்க கோரி, மின் வாரிய உயரதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

தமிழக மின் வாரியம், மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட கள பணிகளை மேற்கொள்ள, 'கேங்மேன்' என்ற பதவியில், 10 ஆயிரம் ஊழியர்களை, உடல்தகுதி மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்தது. இவர்களின் பட்டியல், நடப்பாண்டு பிப்ரவரி இறுதியில் வெளியிடப் பட்டது.

'குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தரவில்லை; பல ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும்' என, எழுத்து தேர்வில் பங்கேற்றோர் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், அனைவருக்கும் வேலை வழங்கப்படாததால், எழுத்து தேர்வில் பங்கேற்றவர்கள், வேலை வழங்கக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்வில் பங்கேற்ற, 50க்கும் மேற்பட்டோர், வேலை கேட்டு மின் வாரிய தலைமை அலுலகம் வந்தனர். அதில், நான்கு பேரை மட்டும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உயரதிகாரிகளிடம் அழைத்து சென்று, மனு கொடுக்க வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X