பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டின் சிறந்த நிறுவனமாக சென்னை ஐ.ஐ.டி., தேர்வு

Updated : செப் 10, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (14+ 16)
Share
Advertisement
சென்னை :உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. மூன்றாவது முறையாக தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. வேலுார் வி.ஐ.டி. - கோவை அம்ரிதா, பாரதியார் பல்கலைகளும் 'டாப் - 100' பட்டியலில் இடம் பெற்றுள்ளன.மத்திய கல்வித்துறை சார்பில் தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்திறன் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் நேற்று
நாடு,சிறந்த நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி.,

சென்னை :உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. மூன்றாவது முறையாக தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. வேலுார் வி.ஐ.டி. - கோவை அம்ரிதா, பாரதியார் பல்கலைகளும் 'டாப் - 100' பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மத்திய கல்வித்துறை சார்பில் தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்திறன் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுதும் இருந்து மொத்தம் 1657 நிறுவனங்கள் இதில் பங்கேற்று உள்ளன.முதல் 100 நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. இன்ஜினியரிங் பிரிவில் தொடர்ந்து ஆறாம் ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி. நிறுவனம் 2ம் இடம் பெற்றுள்ளது. மும்பை, டில்லி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, கவுஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.க்கள் முறையே மூன்று முதல் எட்டாம் இடங்களை பெற்றுள்ளன. டில்லி ஜே.என்.யூ. ஒன்பது; வாரணாசி பனாரஸ் பல்கலை 10ம் இடத்தையும் பெற்றுள்ளன.


15 பிரிவுகளில்...சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் 15 வகையான பிரிவுகளில் 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. அதில் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற்று இந்த நிலையை எட்டியுள்ளது.புதிய ஆராய்ச்சிகள், மாணவர் சேர்க்கை, மாற்று திறனாளிகளுக்கான வசதி போன்றவற்றில் சராசரியாகவும் பொருளாதாரம் மற்றும் சமூக அடிப்படையில் சவால்களை சந்திக்கும் மாணவர்களை அதிகம் சேர்த்துள்ள பிரிவில் குறைந்த மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.


பாரதியார் 'டாப்'தேசிய அளவிலான 'டாப் - 100' பிரிவில் தமிழகத்தில் உள்ள 19 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் மஹாராஷ்டிரா, மேற்கு வங்க கல்வி நிறுவனங்கள் அதிகமாக பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் திருச்சி என்.ஐ.டி. கல்லுாரி 23ம் இடம் பெற்றுள்ளது.
புதுச்சேரி பல்கலை 87ம் இடம் பெற்றுள்ளது.அரசு பல்கலைகளில் கோவை பாரதியார் பல்கலை முன்னிலையுடன் 22ம் இடம் பெற்றுள்ளது. அண்ணா பல்கலை 25; சென்னை 47; அழகப்பா 57; காமராஜ் பல்கலை 83; திருச்சி பாரதிதாசன் 90ம் இடங்களை பெற்று பின்னடைவை சந்தித்து
உள்ளன. தமிழக அரசின் மற்ற பல்கலைகள் 'டாப் - 100' பட்டியலில் இடம் பெறவில்லை.


அம்ரிதா அபாரம்தேசிய அளவிலான 'டாப் - 100' பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கோவை அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் பல்கலை 12ம் இடமாக முன்னிலை பெற்றுள்ளது.வேலுார் வி.ஐ.டி. - 21; தஞ்சை சாஸ்த்ரா 42; சவீதா பல்கலை 49; எஸ்.ஆர்.எம். 53; சத்யபாமா 61; கலசலிங்கம் 74; பாரத் பல்கலை 75; ராமச்சந்திரா 79; கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரி 86; கடைசியாக எஸ்.எஸ்.என். இன்ஜினியரிங் கல்லுாரி 89ம் இடத்தில் உள்ளன.

முன்னிலையில் உள்ள அம்ரிதா நிறுவனம் 100க்கு 35 மதிப்பெண்களும் கடைசியில் உள்ள எஸ்.எஸ்.என். 100க்கு 10 மதிப்பெண்களும் பெற்றுள்ளன. உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் செயல்திறன்களை தெரிந்து கொண்டு சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை தொடர வசதியாக தேசிய தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் முழுமையான விபரங்களை www.nirfindia.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


மருத்துவத்தில் எய்ம்ஸ் முதலிடம்* மருத்துவ கல்லுாரிகளுக்கான பிரிவில் டில்லி எய்ம்ஸ் முதலிடம் பெற்றுள்ளது. சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.ஆர். - வேலுார் சி.எம்.சி. கல்லுாரி ஆகியன முறையே 2 3ம் இடங்களை பெற்றுள்ளன. பல் மருத்துவத்தில் உடுப்பி மணிபால் கல்லுாரி முதலிடம் பெற்றுள்ளது

* புனேவில் உள்ள பாட்டீல் வித்யாபீடம் சென்னை சவீதா பல்கலை முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. சட்ட கல்லுாரிகள் பிரிவில் பெங்களூரு தேசிய சட்ட கல்லுாரி முதலிடம் பெற்றுள்ளது

* பல்கலைகளுக்கான பட்டியலில் பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி. - டில்லி ஜே.என்.யூ. மற்றும் வாரணாசி பனாரஸ் பல்கலைகள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. பாரதியார் 14; அண்ணா பல்கலை 16ம் இடங்களில் உள்ளன. அழகப்பா 33; பாரதிதாசன் 57; மனோன்மணியம் சுந்தரனார் 70; பெரியார் 73ம் இடத்தில் உள்ளன

* கல்லுாரிகளுக்கான பட்டியலில் டில்லி மிரண்டா ஹவுஸ் ஸ்ரீராம் பெண்கள் கல்லுாரி சென்னை லயோலா கல்லுாரி ஆகியன முறையே முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் என 33 நிறுவனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லுாரி 6; பிரசிடென்ஸி என்ற சென்னை மாநில கல்லுாரி 7ம் இடத்தையும் பெற்றுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (14+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
14-செப்-202113:28:30 IST Report Abuse
jayvee மீண்டும் சர்ச்சையில் லொயோலா
Rate this:
Cancel
jay - toronto,கனடா
10-செப்-202118:35:58 IST Report Abuse
jay படிச்ச படிப்புக்கு வேலையில்லை
Rate this:
Cancel
jay - toronto,கனடா
10-செப்-202118:35:41 IST Report Abuse
jay காசு புடுங்கும் முதலிடம் யார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X