சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...: மாவட்டம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
காதல் ஜோடி தற்கொலை முயற்சிஊட்டி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த, 19 வயது இளைஞர், கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரும், கோவை சின்னவேடப்பட்டியைச் சேர்ந்த, 21 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம், ஊட்டிக்கு வந்த இருவரும் லாட்ஜில் தங்கியுள்ளனர். நேற்று காலை ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்தபோது, விஷம் அருந்தி மயக்கம் அடைந்தனர்.

காதல் ஜோடி தற்கொலை முயற்சி

ஊட்டி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த, 19 வயது இளைஞர், கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரும், கோவை சின்னவேடப்பட்டியைச் சேர்ந்த, 21 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம், ஊட்டிக்கு வந்த இருவரும் லாட்ஜில் தங்கியுள்ளனர். நேற்று காலை ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்தபோது, விஷம் அருந்தி மயக்கம் அடைந்தனர். அருகில் படகில்சென்றவர்கள் பார்த்து, படகு இல்ல அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். படகு இல்ல ஊழியர்கள் இருவரையும் மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தாய்ப்பால் குடித்த குழந்தை சாவு

கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவமணி; மனைவி ஸ்ரீபிரியா. தம்பதிக்கு ஒன்றரை மாத ஆண் குழந்தை இருந்தது. நேற்று அதிகாலை ஸ்ரீபிரியா, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து துாங்க வைத்தார். சிறிது நேரத்திற்கு பின், குழந்தை அசைவின்றி இருந்தது. குழந்தையை கடலுார் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூச்சடைப்பு ஏற்பட்டு குழந்தை இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. போலீசார் விசாரிக்கின்றனர்.

தடுப்பூசி போடாதவர் கடைக்கு 'சீல்'

திருப்பத்துார்: திருப்பத்துார் நகராட்சி ஆணையர் ஏகாராஜ் கூறியதாவது:கொரோனாவை ஒழிக்க, முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். நகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து கடைக்காரர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாதவர்களின் கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூவர் தற்கொலை முயற்சி

மதுரை: மதுரை, தமுக்கம் அருகே ஹயத்கான் ரோட்டைச் சேர்ந்தவர் ராம்குமார், 31. 'பாஸ்ட் புட்' கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 1:45 மணிக்கு மனைவி புவனேஸ்வரி, 28; மகள் யாஷ்னிகா, 6 உடன், எலி மருந்து குடித்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.அங்கு வந்த உறவினர்கள், மூவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சில மணி நேரத்தில் மூவரும் தேறினர். கடன் தொல்லையால், இம்முடிவை எடுத்ததாக ராம்குமார் தெரிவித்தார். கடன் கொடுத்தவர்களை மிரட்ட தற்கொலை நாடகம் ஆடினாரா எனவும் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X