சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராகவன், மதனை கைது செய்ய போலீசில் பியுஷ் மனுஷ் புகார்

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:'ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, பா.ஜ.,வை சேர்ந்த ராகவன் மற்றும் மதன் ரவிச்சந்திரனை கைது செய்ய வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்தவர் பியுஷ் மனுஷ்; இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: சில தினங்களுக்கு முன், பா.ஜ.,வைச் சேர்ந்த ராகவன், பூஜை அறையில் ஆபாசமாக நடந்து கொள்வது போன்ற,

சென்னை:'ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, பா.ஜ.,வை சேர்ந்த ராகவன் மற்றும் மதன் ரவிச்சந்திரனை கைது செய்ய வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்தவர் பியுஷ் மனுஷ்; இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: சில தினங்களுக்கு முன், பா.ஜ.,வைச் சேர்ந்த ராகவன், பூஜை அறையில் ஆபாசமாக நடந்து கொள்வது போன்ற, 'வீடியோ' ஒன்று, சமூகவலைதளத்தில் வெளியானது.

இந்த வீடியோவை, அதே கட்சியை சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் என்பவர் வெளியிட்டுஉள்ளார். ராகவன் பூஜை அறையில் அப்படி நடந்து கொண்டது உண்மை என்றால், அவரை கைது செய்ய வேண்டும். ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக, வீடியோவை பொய்யாக சித்தரித்து வெளியிட்டு இருந்தால், மதன் ரவிச்சந்திரனை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X