கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொலை முயற்சி வழக்கு தாய், மகன்களுக்கு சிறை

Added : செப் 09, 2021
Share
Advertisement
ஊட்டி:கொலை முயற்சி வழக்கில் தாய், இரு மகன்களுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், ஊட்டி, நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் விசாலாட்சி, 50; மகன்கள், ரஞ்சித், 30; உதயகுமார், 28. இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத், 27 என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நவ., 6ல், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த

ஊட்டி:கொலை முயற்சி வழக்கில் தாய், இரு மகன்களுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி, நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் விசாலாட்சி, 50; மகன்கள், ரஞ்சித், 30; உதயகுமார், 28. இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத், 27 என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நவ., 6ல், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விசாலாட்சியின் மகன்கள், வினோத்தை தாக்கிஉள்ளனர். ஊட்டி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு, ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாலாட்சி, ரஞ்சித், உதயகுமார் ஆகியோருக்கு, நேற்று தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விசாலாட்சிக்கு 2,000 ரூபாய், ரஞ்சித்துக்கு, 2,500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X