சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மார்பளவு தண்ணீரில் மாணவர்கள் தரைப்பாலம் அமைக்கப்படுமா?

Added : செப் 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ராணிப்பேட்டை:சோளிங்கர் அருகே, தலையில் புத்தக பையுடன், மார்பளவு தண்ணீரில் நனைந்தபடியே மாணவர்கள் பள்ளி சென்று வருகின்றனர்ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர்அடுத்த நந்திமங்கலத்தில் 3,000 பேர் வசிக்கின்றனர். இங்கிருந்து, 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், 3 கி.மீ.,யில் உள்ள கட்டாரிகுப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.தினமும், நந்திமங்கலம்ஓடை வழியாக சைக்கிளில்
 மார்பளவு தண்ணீரில் மாணவர்கள் தரைப்பாலம் அமைக்கப்படுமா?

ராணிப்பேட்டை:சோளிங்கர் அருகே, தலையில் புத்தக பையுடன், மார்பளவு தண்ணீரில் நனைந்தபடியே மாணவர்கள் பள்ளி சென்று வருகின்றனர்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர்அடுத்த நந்திமங்கலத்தில் 3,000 பேர் வசிக்கின்றனர். இங்கிருந்து, 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், 3 கி.மீ.,யில் உள்ள கட்டாரிகுப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.தினமும், நந்திமங்கலம்ஓடை வழியாக சைக்கிளில் சென்று வந்தனர்.

ஆந்திர மாநிலம், கலசகுண்டா அணை திறக்கப்பட்டதால், பொன்னை, பாலாற்றில் அதிகளவு தண்ணீர் வருகிறது. நந்திமங்கலம் ஓடையில் தண்ணீர் ஓடுகிறது.இதனால், மாணவ - மாணவியர் புத்தக பையை தலையில் வைத்து, மார்பளவு தண்ணீரில் ஓடையை கடந்து பள்ளிக்குசெல்கின்றனர். அப்பகுதி இளைஞர்கள், மாணவர்களை பாதுகாப்பாக தண்ணீரில் அழைத்துச் சென்று வருகின்றனர்.

நந்திமங்கலம் கிராம தலைவர் மணிவாசகம் கூறியதாவது:பாலாற்றில் வெள்ளம் வந்தால் நந்திமங்கலம் ஓடையில், 20 நாட்களுக்கு தண்ணீர் வரும். இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், பொது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, நந்திமங்கலம் ஓடையில் தரைப்பாலம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
10-செப்-202108:33:04 IST Report Abuse
Darmavan எதற்கு தரை பாலம் மேம்பாலமே தேவை.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
10-செப்-202107:30:08 IST Report Abuse
NicoleThomson இவ்ளோ பெரு நின்னு வேடிக்கை பார்க்குறாங்களே , ஊரு கூடி தேரு இழுத்த தமிழகத்தின் தற்போதைய நிலை ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X