பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
ஈரோடு:சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒரு நிமிடத்தில், 100 தோப்புக்கரணம் போட்டு சாதனை படைத்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துராம்; அரசு பஸ் டிரைவர். இவரது மகன்கள் சுபாஷ், 13; பரத், 11. சுபாஷ் எட்டு, பரத் ஆறாம் வகுப்பு படிக்கின்றனர்.கடந்த நான்கு ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்ட இவர்கள், ஒரு நிமிடத்தில், 100 தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை
 ஒரு நிமிடத்தில்  100 தோப்புக்கரணம்

ஈரோடு:சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒரு நிமிடத்தில், 100 தோப்புக்கரணம் போட்டு சாதனை படைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துராம்; அரசு பஸ் டிரைவர். இவரது மகன்கள் சுபாஷ், 13; பரத், 11. சுபாஷ் எட்டு, பரத் ஆறாம் வகுப்பு படிக்கின்றனர்.கடந்த நான்கு ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்ட இவர்கள், ஒரு நிமிடத்தில், 100 தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்துள்ளனர்.

இவர்களது சாதனையை, 'கலாம் வேல்டு ரெக்கார்ட்ஸ்' நிறுவனத்தினர் அங்கீகரித்து, சான்றிதழ், பதக்கங்கள் வழங்கியுள்ளனர்.சகோதரர்கள் கூறுகையில், 'நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தோப்புக்கரணம் போடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் உடலில் ரத்த ஓட்டம், காற்றோட்டம், வெப்ப ஓட்டம் சீராகும்.'நினைவாற்றல் அதிகரித்து, உடல் வலிமை பெறும். மேலும் பல்வேறு சாதனைகள் படைப்போம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X