சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., அமைப்பதாக ரூ.7.69 லட்சம் மோசடி

Added : செப் 09, 2021
Share
Advertisement
சேலம்:ஏ.டி.எம்., அமைத்து வாடகை தருவதாக கூறி, 7.69 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து, சேலம் போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம், தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் மரியாபிள்ளை, 43; அசாம் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிகிறார். இவரது முகநுாலில், டில்லியைச் சேர்ந்த, மித்ரா சி.எஸ்.பி., நிறுவனம் பெயரில், மர்ம கும்பல் போலி விளம்பரத்தை வெளியிட்டது. அதில், 'சேலத்தில் ஏ.டி.எம்., அமைக்க இடம்

சேலம்:ஏ.டி.எம்., அமைத்து வாடகை தருவதாக கூறி, 7.69 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து, சேலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம், தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் மரியாபிள்ளை, 43; அசாம் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிகிறார். இவரது முகநுாலில், டில்லியைச் சேர்ந்த, மித்ரா சி.எஸ்.பி., நிறுவனம் பெயரில், மர்ம கும்பல் போலி விளம்பரத்தை வெளியிட்டது. அதில், 'சேலத்தில் ஏ.டி.எம்., அமைக்க இடம் வழங்குவோருக்கு, மாத வாடகை, அதில் பணிபுரியும் ஒருவருக்கு சம்பளம் வழங்கப்படும்.
அதற்காக குறிப்பிட்ட தொகையை, நில உரிமையாளர் முதலீடு செய்ய வேண்டும். அத்தொகை, ஐந்து ஆண்டுகளுக்கு பின் வட்டியுடன் திரும்ப வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணில் பேசி, அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குக்கு, ஏழு தவணையாக மரியாபிள்ளை, 7 லட்சத்து 69 ஆயிரத்து 151 ரூபாய் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்ற மர்ம நபர்கள், ஏ.டி.எம்., நிறுவவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மரியாபிள்ளை, மனைவி பரமேஸ்வரியிடம் தெரிவித்துள்ளார். பரமேஸ்வரி புகார்படி, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X