சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு வேலை மோசடி இளம்பெண் கைது

Added : செப் 09, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி:அரசு வேலை வாங்கி தருவதாக, 5.65 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர், 30; மனைவி சத்யா, 24. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பொம்மண்டபள்ளியைச் சேர்ந்தவர் சுபலட்சுமி, 24. இவர், சில ஆண்டுகளுக்கு முன் வரை, கிருஷ்ணகிரி கோ ஆப்பரேட்டிவ் காலனியில் வசித்து வந்தார்.சத்யாவும், சுபலட்சுமியும் பள்ளி தோழியர். இரு

கிருஷ்ணகிரி:அரசு வேலை வாங்கி தருவதாக, 5.65 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர், 30; மனைவி சத்யா, 24. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பொம்மண்டபள்ளியைச் சேர்ந்தவர் சுபலட்சுமி, 24. இவர், சில ஆண்டுகளுக்கு முன் வரை, கிருஷ்ணகிரி கோ ஆப்பரேட்டிவ் காலனியில் வசித்து வந்தார்.சத்யாவும், சுபலட்சுமியும் பள்ளி தோழியர். இரு ஆண்டுகளுக்கு முன், தனக்கு அரசு அதிகாரிகளிடையே நல்ல பழக்கம் இருப்பதாகவும், அவர்களிடம் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கலாம் எனவும் சத்யாவிடம், சுபலட்சுமி கூறியுள்ளார்.

அதை நம்பிய சத்யாவும், கணவர் சங்கருக்கு ஓசூர் வருமானவரித் துறை அலுவலக பணிக்கு, 4.65 லட்சம் ரூபாயை சுபலட்சுமியிடம் கொடுத்துள்ளார். இதேபோல, சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சேர்ந்த முத்தையன் என்பவரிடமும், 1 லட்சம் ரூபாய் சுபலட்சுமி பெற்றுள்ளார்.இந்நிலையில், ஜூன் 21ல் வேலைக்கான உத்தரவு நகலை சத்யாவிடம் வழங்கினார். அதை வாங்கி அலுவலகம் சென்ற சங்கருக்கு, அது போலி என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.சத்யா புகார்படி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சுபலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X