அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களுக்கு இறகு பந்து பயிற்சி

Added : செப் 09, 2021
Share
Advertisement
கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - சபா.ராஜேந்திரன்: நெய்வேலி தொகுதி வடக்குத்து ஊராட்சி நகர் பகுதியில், இறகு பந்து ஆடுகளம் அமைக்க வேண்டும்.அமைச்சர் மெய்யநாதன்: தற்போது பரிசீலனையில் இல்லை.சபா.ராஜேந்திரன்: வடக்குத்து ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இளைஞர்கள், இளம்பெண்கள், 'ஆன்லைன்' விளையாட்டிலும், சமூக வலைதளங்களிலும்

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - சபா.ராஜேந்திரன்:

நெய்வேலி தொகுதி வடக்குத்து ஊராட்சி நகர் பகுதியில், இறகு பந்து ஆடுகளம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் மெய்யநாதன்:

தற்போது பரிசீலனையில் இல்லை.

சபா.ராஜேந்திரன்:

வடக்குத்து ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இளைஞர்கள், இளம்பெண்கள், 'ஆன்லைன்' விளையாட்டிலும், சமூக வலைதளங்களிலும் மூழ்குவதை தவிர்த்து உடற்பயிற்சியில் ஈடுபட, இறகு பந்து ஆடுகளம் அமைக்க வேண்டும். அரசுக்கு சொந்தமான இடம் நிறைய உள்ளது. எனவே, நேர்மறையான பதிலை எதிர்பார்க்கிறேன்.

அமைச்சர் மெய்யநாதன்:

கடலுார் மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த, 9.85 கோடி ரூபாய் செலவில் புனரமைக்க, புதிய செயற்கை ஆடுதளம் அமைக்க கருத்துரு வந்துள்ளது. முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 11.75 கோடி ரூபாய் செலவில், பல்நோக்குவிளையாட்டு மைதானம் அமைக்கவும் கருத்து பெறப்பட்டு உள்ளது. வடக்குத்து ஊராட்சியில், இறகு பந்து ஆடுகளம் அமைக்க பரிசீலிக்கப்படும்.

சபா.ராஜேந்திரன்:

எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில், 2009ல் உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்பட்டது. உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. சபாநாயகரும், விளையாட்டு துறை அமைச்சரும் இணைந்து உபகரணங்களை புதுப்பித்து தர வேண்டும்.இறகு பந்து ஆடுகளத்தையும் திறக்க வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு:

அமைச்சர், நல்ல பதில் கூறுங்கள்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

எம்.எல்.ஏ.,க்கள் உடற்பயிற்சி செய்வதற்காக, உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்பட்டது.முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அதை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இறகு பந்து மைதானம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில், முதல்வர் திறந்து வைப்பார். இறகு பந்து பயிற்சியாளர்களும் நியமிக்கப்படுவர்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X