கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு வக்கீல் நியமிக்க வழக்கு அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Added : செப் 09, 2021
Share
Advertisement
மதுரை:உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சிவில், கிரிமினல் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு, கிரிமினல் மேல்முறையீடு, தண்டனை நிறுத்தம், இறுதி விசாரணை போன்ற
 அரசு வக்கீல் நியமிக்க வழக்கு அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

மதுரை:உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சிவில், கிரிமினல் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு, கிரிமினல் மேல்முறையீடு, தண்டனை நிறுத்தம், இறுதி விசாரணை போன்ற கிரிமினல் வழக்குகளில், அரசுத் தரப்பில் ஒரு வழக்கறிஞர் மட்டுமே ஆஜராகிறார். அவருக்கு பணிச்சுமை அதிகரித்து உள்ளது.

சிவில், கிரிமினல் வழக்குகளில், அரசுத் தரப்பில் ஆஜராக போதிய வழக்கறிஞர்கள் இல்லை. இதனால் பதில் மனு தாக்கல் செய்வது, அதிகாரிகளிடம் விபரம் பெற்றுத் தெரிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மனுதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.சிவில், கிரிமினல் தொடர்பான வழக்குகளில் ஆஜராக, அரசு வழக்கறிஞர்களை நியமிக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர், 'இதில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற முழு நீதிபதிகள் குழு முடிவெடுக்க வேண்டியுள்ளது' என்றனர்.மேலும், தமிழக பொதுத் துறை மற்றும் சட்டத் துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, விபரம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு டிச., 23க்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X