ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா தாக்கல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா தாக்கல்

Added : செப் 09, 2021
Share
சென்னை:தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்தார்.'தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அமைக்கப்படும்' என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஐந்து உறுப்பினர்கள்அதை செயல்படுத்துவதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த சட்டம், 2021ம்

சென்னை:தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

'தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அமைக்கப்படும்' என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஐந்து உறுப்பினர்கள்அதை செயல்படுத்துவதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த சட்டம், 2021ம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய சட்டம் என அழைக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான பொருட்கூறுகளில் சிறந்த அனுபவம் பெற்ற, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைவராக இருப்பார்.ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். உறுப்பினர்களில் ஒருவர் மகளிராக இருக்க வேண்டும். செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருப்பார். ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மூன்று ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பர்.தலைவர் 70 வயது நிறைவடையும் வரை, உறுப்பினர்கள் 65 வயது நிறைவடையும் வரை பதவியில் இருக்கலாம்.


ஆலோசனைகள்

ஆணையம் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தேவைப்படும் போது கூட வேண்டும்.தலைவர் பொருத்தமென கருதும் நேரத்திலும், இடத்திலும் கூட வேண்டும். ஆணையம் தன்னிச்சையாக, பாதிக்கப்பட்ட ஒருவர், அவர் சார்ந்த நபரால் அளிக்கப்படும் மனுவை விசாரிக்கலாம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்களை பாதுகாப்பது தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில், பொதுப்பணியாளர் கவனக்குறைவாக செயல்பட்டதாக ஆணையம் கருதினால், அதை விசாரித்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கலாம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பாக, அரசு மேற்கொள்ள வேண்டிய, தகுந்த சட்ட மற்றும் நல நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகள் வழங்கலாம். இவ்வாறு ஆணையம் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு செயல்பாடுகள், சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X