பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியம்: வெங்கையா

Added : செப் 09, 2021
Share
Advertisement
திருச்சி:''இந்தியாவின் கனவை நனவாக்கும் முயற்சிகளுக்கு, தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியம்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.திருச்சி எஸ்.ஆர்.எம்., பல்கலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் துவக்க விழா, நேற்று நடந்தது. சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக புதிய வளாகத்தை திறந்து வைத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
 தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியம்: வெங்கையா

திருச்சி:''இந்தியாவின் கனவை நனவாக்கும் முயற்சிகளுக்கு, தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியம்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

திருச்சி எஸ்.ஆர்.எம்., பல்கலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் துவக்க விழா, நேற்று நடந்தது. சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக புதிய வளாகத்தை திறந்து வைத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:

எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில், அதன் நிறுவனர் பாரிவேந்தர் தலைமையின் யதார்த்தம் தெரிகிறது.- 1969ம் ஆண்டு துவக்கப் பள்ளியில் துவங்கிய இந்த குழுமத்தின் பணி, 50 ஆண்டுகளில், தமிழகத்தை கடந்தும் விரிவடைந்துள்ளது. கல்வியின் மூலம் வலுவூட்டப்பட்ட இந்தியாவின்கனவை நனவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு, தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியமாகிறது.

ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற, முதல் இந்திய மாலுமியான நேத்ரா குமணன், எஸ்.ஆர்.எம்., மாணவி என்பது பெருமையான விஷயம். மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம்; உங்கள் வெற்றியில் தான் தேசத்தின் வெற்றி உள்ளது. புதிய கல்விக் கொள்கை, நாட்டின் வளர்ச்சிக்கான புதிய பாதையை உருவாக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் மற்றும் நிறுவனரான எம்.பி., பாரிவேந்தர், அமைச்சர்கள் பொன்முடி, நேரு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X