தமிழ்நாடு

மாநகராட்சி சொத்து மீட்கஉருவாகிறது புது திட்டம்; பிள்ளையார் சுழி!

Updated : செப் 10, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை;கோவை மாநகராட்சி உதவி/ இளம் பொறியாளர்கள் தற்போது கவனித்து வரும் வார்டு பணிகளுடன், நகரமைப்பு பிரிவு வேலைகளையும் கூடுதலாக கவனிக்க, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாநகராட்சியில், நகரமைப்பு அலுவலர் (திட்டம்) கீழ், மண்டலத்துக்கு ஒருவர் வீதம் உதவி நகரமைப்பு அலுவலர்கள் பணிபுரிகின்றனர். உதவி/ இளம் பொறியாளர்களே, இப்பணிக்கு நியமிக்கின்றனர்.இவர்கள், கட்டட வரைபட அனுமதி
 மாநகராட்சி சொத்து மீட்கஉருவாகிறது புது திட்டம்; பிள்ளையார் சுழி!

கோவை;கோவை மாநகராட்சி உதவி/ இளம் பொறியாளர்கள் தற்போது கவனித்து வரும் வார்டு பணிகளுடன், நகரமைப்பு பிரிவு வேலைகளையும் கூடுதலாக கவனிக்க, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாநகராட்சியில், நகரமைப்பு அலுவலர் (திட்டம்) கீழ், மண்டலத்துக்கு ஒருவர் வீதம் உதவி நகரமைப்பு அலுவலர்கள் பணிபுரிகின்றனர். உதவி/ இளம் பொறியாளர்களே, இப்பணிக்கு நியமிக்கின்றனர்.

இவர்கள், கட்டட வரைபட அனுமதி வழங்கும் கோப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றுதல், அனுமதியின்றி கட்டிய கட்டடங்களை கண்டறிதல், 'ரிசர்வ் சைட்'டுகளை மீட்பது உள்ளிட்ட பணிகளில் அக்கறை காட்டுவதில்லை.அதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் பறிபோகின்றன.அதனால், நகரமைப்பு பிரிவை பலப்படுத்தும் வகையில், பொறியியல் பிரிவின் கீழ் பணிபுரியும் உதவி/ இளம் பொறியாளர்கள், கூடுதலாக நகரமைப்பு வேலைகளையும் செய்ய வேண்டுமென, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவு:அனுமதியற்ற/ அனுமதிக்கு மாறான கட்டடங்கள் மீது நோட்டீஸ் வழங்கி, தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.n மாாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சாலைகள், பொது இடங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொது ஒதுக்கீடு இடங்களை பாதுகாக்க வேண்டும்.

இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை கண்டறிந்து, நோட்டீஸ் வழங்க வேண்டும்.அனுமதியற்ற மனைப்பிரிவு மனையிடங்களில் கட்டுமானம் செய்துள்ள விபரத்தை கண்டறிந்து, வரன்முறை செய்தல். கட்டட வரைபட அனுமதிபடி, கட்டப்படுகிறதா என, அடித்தளம் கட்டும்போதே கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

தங்களது வார்டுக்கு உட்பட்ட நகரமைப்பு தொடர்பான வழக்குகளில், மாநகராட்சி சார்பில் மனு தாக்கல் செய்தல் மற்றும் தொடர் வழக்கு நடவடிக்கை தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.இது, உதவி/இளம் பொறியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.'மன அழுத்தம் ஏற்படுத்தும்'உதவி பொறியாளர்கள் கூறுகையில், 'கோவையில், 100 வார்டுகள் இருக்கின்றன.

இரு வார்டுக்கு ஒருவர் வீதம், 50 பேர் நியமிக்க வேண்டும்; 38 பேரே இருக்கிறோம். ஒருவரே இரண்டு அல்லது மூன்று வார்டுகள் கவனிக்கின்றனர்.சில வார்டுகளுக்கு தேர்ச்சி திறனற்ற பணியாளர்களுக்கு வார்டு பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. வளர்ச்சி பணிகளை பார்க்க முடியாமல் திணறி வருகிறோம். கூடுதல் சுமையாக, நகரமைப்பு பிரிவு வேலை வழங்கப்பட்டுள்ளது. இது, மன அழுத்தத்தையே ஏற்படுத்தும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
10-செப்-202112:13:23 IST Report Abuse
GANESUN லஞ்ச் நுங்கு சாப்பிட நோகாது. கொள்ளுன்னா வாய் திறக்கும் குதிரை கடிவாளம்னா வாய் மூடுமாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X