பொது செய்தி

தமிழ்நாடு

போன் செய்தால் போதும்; வீடு தேடி வரும் தடுப்பூசி!

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மாநகராட்சி சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்பதே நோக்கம்.ஆனால், சில வீடுகளில் மிகவும் வயதானவர்கள் பலர், இன்னும் தடுப்பூசி போடாமலே உள்ளனர். தடுப்பூசி மையங்களுக்கு செல்வதால், தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயமும், வேறு

கோவை:கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மாநகராட்சி சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்பதே நோக்கம்.ஆனால், சில வீடுகளில் மிகவும் வயதானவர்கள் பலர், இன்னும் தடுப்பூசி போடாமலே உள்ளனர். தடுப்பூசி மையங்களுக்கு செல்வதால், தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயமும், வேறு நோய்களுக்கு மருந்து சாப்பிடுவதும் தயக்கத்துக்கு காரணம். மாநகராட்சி கமிஷனர் பார்வைக்கு இது குறித்து கொண்டு செல்லப்பட்டது.அவர் கூறுகையில், ''முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இன்னும் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தால், கோவை மாநகராட்சிக்கு, 0422 - 230 2323, 97505 54321 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம். ஆதார் அட்டை தயாராக வைத்திருக்க வேண்டும். மருத்துவ குழுவினர் வீடு தேடி வந்து, தடுப்பூசி போடுவர்,'' என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X