பொது செய்தி

தமிழ்நாடு

இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: கோவில்களில் வழிபட அனுமதி இல்லை

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை:விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை குடியிருப்புகளுக்கு அருகே உள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் சமர்ப்பிக்கலாம் என்று அத்துறை அறிவித்துள்ளது.இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கும், பொது இடங்களில் சிலை வைப்பதற்கும் அரசு

கோவை:விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை குடியிருப்புகளுக்கு அருகே உள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் சமர்ப்பிக்கலாம் என்று அத்துறை அறிவித்துள்ளது.இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கும், பொது இடங்களில் சிலை வைப்பதற்கும் அரசு அனுமதி வழங்கவில்லை.இச்சூழலில், வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளை, குடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள ஹிந்து சமய அறநிலையத்துறையின், கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம்.அவற்றை பெற்று விசர்ஜனம் செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஏற்பாடுகளை செய்துள்ளன.ஆனால் சிலைகளை சமர்ப்பிக்க கோவிலுக்கு செல்கிறோம் என்ற பெயரில், கோவில் வளாகத்தில் நுழைந்து கருவறைக்குள் நுழைய, யாரும் முயற்சிக்க வேண்டாம். கோவிலினுள் நுழைய அனுமதி இல்லை என்பதை, அறநிலையத்துறை தெளிவுபட தெரிவித்துள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி கூறுகையில், ''விநாயகர் சிலைகளை கோவிலில் சமர்ப்பிக்கலாம். கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதியில்லை. சிலைகளை சமர்ப்பித்தவுடன் பக்தர்கள் புறப்பட்டு விட வேண்டும். கூட்டம் கூட அனுமதியில்லை. முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், கொரோனா பரவலுக்கு யாரும் காரணமாகி விடக்கூடாது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X