பொது செய்தி

தமிழ்நாடு

இன்று விநாயகர் சதுர்த்தி விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
கோவை:விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதியில்லை. தனி நபர்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று

கோவை:விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதியில்லை. தனி நபர்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.அரசு உத்தரவை மீறி யாரேனும் சிலைகளை பொது இடங்களில் வைத்தால், உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர். கோவில்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மாநகரில், 1,000 போலீசார், மாவட்டத்தில், 1,500 என, 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரில், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குள், பொது இடங்களில் வைக்கப்படும், சிலைகளை அகற்ற, 15 குழு அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு குழுவிலும், ஒரு எஸ்.ஐ., இரு போலீசார், மாநகராட்சி, வருவாய் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவர். பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகளை அகற்ற வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பறிமுதல் செய்யப்படும் சிலைகள் இந்து சமய அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X