பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு அகழ்வாய்வில் 3200 ஆண்டு பழமையான நாகரீகம் கண்டுபிடிப்பு

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
திருநெல்வேலி: தமிழக அரசு நடத்தி வரும் தாமிரபரணி ஆற்றை ஒட்டிய பொருநை அகழ்வாய்வில் கி.மு.1155 ஆண்டு காலத்திய நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,200 ஆண்டு பழமை வாய்ந்த நாகரீகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதற்கு முன் நடந்த ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை அகழ்வாய்வில் கி.மு 9ம் நூற்றாண்டு மற்றும் கி.மு 8ம் நூற்றாண்டு காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில்

திருநெல்வேலி: தமிழக அரசு நடத்தி வரும் தாமிரபரணி ஆற்றை ஒட்டிய பொருநை அகழ்வாய்வில் கி.மு.1155 ஆண்டு காலத்திய நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,200 ஆண்டு பழமை வாய்ந்த நாகரீகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.latest tamil news


இதற்கு முன் நடந்த ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை அகழ்வாய்வில் கி.மு 9ம் நூற்றாண்டு மற்றும் கி.மு 8ம் நூற்றாண்டு காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு 400 ஆண்டுகள் பின்னோக்கிய பழம் நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டு்ள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, இந்திய துணைக் கண்ட நாகரீகம் தமிழகத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட வேண்டும். கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சூரியன், சந்திரன் முத்திரை பொறித்த வெள்ளி நாணயங்கள் கி.மு நான்காம் நூற்றாண்டினை சார்ந்தாக அறியப்பட்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருநை நாகரீகம் மேலும் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ளது'. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்

இது குறித்து பேசிய தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ' தமிழக நாகரீகம் மிக பழமை வாய்ந்தது என்று எல்லோராலும் கூறப்பட்டு வந்தது. அதற்கு இப்போது தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளது. பொருநை நாகரீகம் தென்னிந்தியாவின் மிகப் பழமையான நாகரீகம் என்பது தெளிவாகி உள்ளது. தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்த மொழி என்பது நிரூபணம் ஆகி உள்ளது.


latest tamil news


தமிழக அரசு நெல்லையில் ரூ 15 கோடி செலவில் அகழ்வாய்வு அருங்காட்சியகம் நிறுவும். மேலும் பழங்காலத்து தமிழகத்தோடு வியாபார தொடர்பிலிருந்த எகிப்து, ஓமன், இந்தோனேசியா தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் அகழ்வாய்வில் ஈடுபடும்' என அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
11-செப்-202102:13:30 IST Report Abuse
ஏகன் ஆதன் சிந்து சமவெளிதான் திராவிடர்களின் மூலம் என்று கூறி வந்த நிலையில் , இது ஒரே பின்னடைவே . சிந்து சமவெளியின் முதுமக்கள் தாழி பயன்படுத்தவில்லை ஆனால் அதே காலகட்டத்தை சார்ந்த தாமிரபரணி சமூகம் பயன்படுத்தி உள்ளது. இதை விளக்குவது கடினம் .
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
10-செப்-202113:59:29 IST Report Abuse
vbs manian ஆகவே இப்போது இருப்பதை விட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகம் சீரும் சிறப்புமாக இருந்தது தெரிகிறது. இந்த ஆராய்ச்சி மூலம் பலவிதத்திலும் தத்தளிக்கும் இப்போதைய தமிழகத்துக்கு என்ன பயன். திண்ணையில் உட்கார்ந்து பழம் பெருமை பேசி பொழுதை கழிக்கலாம்.
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
10-செப்-202112:52:55 IST Report Abuse
SKANDH அது சரி இந்த... தென்னரசும் தெலுங்கன் கல். இவன் கல் ஏதோ ஏதோ சொல்லி தமிழனை குழப்பி பதவியை குறியாக வைத்திருக்கானுங்க. ஒழிக்கப்பட வேண்டியது இந்த திமுக என்ற தெலுங்கன் முன்னேற்ற கழகமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X