அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மோதல் போக்கு வேண்டாம் மாணவர் நலனை பாருங்கள்'

Updated : செப் 11, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை :'மத்திய அரசுடன் மோதல் போக்கை விடுத்து 150 ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி பயில மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மதுரை தோப்பூரில் 1264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார். நிலம் கையகப்படுத்தியதை தொடர்ந்து மருத்துவமனை கட்ட மத்திய அரசு 'ஜைக்கா' நிதி
 மோதல் போக்கு , மாணவர் நலன், பாருங்கள்'


சென்னை :'மத்திய அரசுடன் மோதல் போக்கை விடுத்து 150 ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி பயில மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:மதுரை தோப்பூரில் 1264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார். நிலம் கையகப்படுத்தியதை தொடர்ந்து மருத்துவமனை கட்ட மத்திய அரசு 'ஜைக்கா' நிதி நிறுவனத்துடன் நடப்பாண்டு மார்ச்சில் ஒப்பந்தம்
செய்தது.'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவம் படிக்க 150 புதிய மாணவர்களுக்கான சேர்க்கையை நடத்தி கொள்ளலாம்; மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்து முடிக்கும் போது எய்ம்ஸ் வளாகத்தில் கல்லுாரி கட்டி முடிக்கப்படும். பின் மாணவர்களை இடமாற்றம் செய்து கொள்ளலாம்' என மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.தமிழகத்தை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ கல்வி பயில வாய்ப்பளித்தும் அதை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்கு உரியது. எய்ம்ஸ் கட்டப்படும் மற்ற மாநிலங்களில் தற்காலிக இடங்களில் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் படிப்பை துவக்கி விட்டனர்.

ஆகவே மாநில அரசு மத்திய அரசின் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் நிலை எடுத்து போராடி கொண்டிருந்தால் மாநிலத்தின் மக்கள் நலன் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.
மத்திய அரசுடன் மோதல் போக்கை விடுத்து உடனே 150 ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி பயில மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-202112:28:58 IST Report Abuse
அப்புசாமி இந்த அறிவு 2017 ல ஹெலிகாப்டரில் வந்து அடிக்கல் நாட்டி மெடல் குத்திக்கும் போதே இருந்திருக்கணும். கையிலே காசே இல்லியாம். ஜப்பானிடம் கடன் வாங்கி கட்டுவாங்களாம். பிரதமர் வந்து அதுக்கு அடிக்கல் நாட்டுவாராம் இப்போ கட்டாந்தைரயில் கிளாஸ் நடத்தணுமாம். என்னய்யா நடக்குது இங்கே? கோபேக் மோடின்னு சொன்னது சரியாத்தான் இருக்கு. உருப்படாத திட்டத்துக்கு ஒம்பது செங்கல்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-செப்-202112:10:24 IST Report Abuse
Pugazh V இவர் சாதாரண எம் எல் ஏ கூட இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு சொல்ல இவர் யார்? மக்களால் ஒதுக்கப்பட்டவர்தானே இவர்?
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
10-செப்-202121:56:19 IST Report Abuse
sankarஸ்டாலின் அரசு ஊழியர் .அண்ணாமலை ஒட்டு போட்ட குடிமகன் .குடி மக்கள் கேள்வி பதில் சொல்வது ஜநாயக மாண்பு . அள்ளுக்காட்சியின் பிரானுடை தோலுரிப்பது எதிர்க்கட்சிகளின் கடமை...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-செப்-202112:07:10 IST Report Abuse
duruvasar சும்மா இருங்க அண்ணாமலையாரே. கடுப்பேத்தாதீங்க. பிஜேபிக்காரங்க நிக்கற ஒரு போட்டாவை பார்த்துவிட்டு நேற்று ஒரு புள்ளையாண்டன் கண்ணுல ரத்தத்தோடு சூடா ஜலமும் வந்துடுத்துன்னு லஜ்ஜையை விட்டு பதிவு போட்டிருந்தான். எனக்கு 'பக்' குன்னு ஆகிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X