கடன் உச்சவரம்பை ஏற்க வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடன் உச்சவரம்பை ஏற்க வேண்டுகோள்

Added : செப் 10, 2021
Share
கோவை:"கடன் தொகை மறுசீரமைப்பின் போது, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள கடன் வரையறையான 50 கோடி ரூபாயை, 100 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்' என, தொழில் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் ஒருங்கிணைப்பு குழு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு குறு நடுத்தர தொழில் துறை

கோவை:"கடன் தொகை மறுசீரமைப்பின் போது, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள கடன் வரையறையான 50 கோடி ரூபாயை, 100 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்' என, தொழில் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் ஒருங்கிணைப்பு குழு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் டாட்டு ரானே ஆகியோருக்கு விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:கடன் தொகை மறுசீரமைப்பின் போது, தற்போதுள்ள வரையான 50 கோடி ரூபாயை 100 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.கடன் தவணைகளுக்கு தற்போது நீட்டிப்பு செய்துள்ள காலவரையறையான 2021 மார்ச் 31 என்பதை, 2022 செப்டம்பர் 30 வரை நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு, அந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X