பொது செய்தி

தமிழ்நாடு

மணல் மூட்டை அமைத்து 'ரவுண்டானா' சோதனை

Added : செப் 10, 2021
Share
Advertisement
வடவள்ளி;வடவள்ளியில், மூன்று ஆண்டுகளாக இழுபறியில் இருந்த ரவுண்டானா அமைக்கும் பணி, மீண்டும் துவங்கியுள்ளது.கோவை மாநகராட்சியில், வளர்ந்து வரும் பகுதியாக வடவள்ளி பகுதி உள்ளது. மருதமலை கோவில், சார்பதிவாளர் அலுவலகம், சட்ட கல்லூரி, பாரதியார் பல்கலை., அண்ணா பல்கலை., உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளதால், வடவள்ளி - மருதமலை சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று
 மணல் மூட்டை அமைத்து 'ரவுண்டானா' சோதனை

வடவள்ளி;வடவள்ளியில், மூன்று ஆண்டுகளாக இழுபறியில் இருந்த ரவுண்டானா அமைக்கும் பணி, மீண்டும் துவங்கியுள்ளது.கோவை மாநகராட்சியில், வளர்ந்து வரும் பகுதியாக வடவள்ளி பகுதி உள்ளது. மருதமலை கோவில், சார்பதிவாளர் அலுவலகம், சட்ட கல்லூரி, பாரதியார் பல்கலை., அண்ணா பல்கலை., உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளதால், வடவள்ளி - மருதமலை சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இதனால், வடவள்ளி பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில், 2018ம் ஆண்டு, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், வடவள்ளியில் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா, டிவைடர் அமைக்க திட்டமிடப்பட்டது.இதில், சாலை விரிவாக்கம் மற்றும் டிவைடர் வைக்கும் பணி நிறைவடைந்தது. ரவுண்டானா அமைப்பதற்காக, மணல் மூட்டைகள் வைத்து சோதனை செய்யப்பட்டது. அதன்பின், அத்திட்டம் கைவிடப்பட்டது.தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது ரவுண்டானா அமைப்பதற்காக, நெடுஞ்சாலைத்துறையினர் சோதனை முறையில், மணல் மூட்டை அடுக்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X