பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாய் காக்க நடவடிக்கை தேவை

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருவாடானை--சின்னக்கீரமங்கலம் கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து பராமரிக்கபடாமல் உள்ளது.மழை நீர் வரத்து கால்வாயும் புதர்மண்டி பாழாகியுள்ளது. மழை பெய்தாலும் முழுமையாக தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமானசின்னக்கீரமங்கலம் கண்மாய் 25 எக்டேர் பரப்பளவும்,

திருவாடானை--சின்னக்கீரமங்கலம் கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து பராமரிக்கபடாமல் உள்ளது.மழை நீர் வரத்து கால்வாயும் புதர்மண்டி பாழாகியுள்ளது.

மழை பெய்தாலும் முழுமையாக தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமானசின்னக்கீரமங்கலம் கண்மாய் 25 எக்டேர் பரப்பளவும், 82 ஏக்கர் பாசன வசதியும், 11 மில்லியன் கன அடி கொள்ளவும் கொண்டது. மூன்று மடைகளும், ஒரு கலுங்கும் உள்ளது. சின்னக்கீரமங்கலம், வத்தாபட்டி உள்ளிட்ட பல குடியிருப்புகளை சேர்ந்த விவசாயிகள் நன்செய், புன்செய் நிலங்களில் சாகுபடி செய்கின்றனர். கண்மாய் பராமரிப்பு இல்லாமல் சில இடங்களில் மணல் மேடாகிவிட்டது. இக் கண்மாய்க்கு கீரமங்கலம் கண்மாயிலிருந்துவரத்துகால்வாய்கள் உள்ளன. இதன் மூலம் சின்னக்கீரமங்கலம் உள்ளிட்ட பல குடியிருப்புகளை சேர்ந்த விவசாயிகள் பயன்அடைகின்றனர்.கண்மாய் உள் பகுதி மட்டுமின்றி வயல்களுக்கு செல்லும் மடைகளை மணல் மூடியதால் தண்ணீர்வயலுக்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சின்னக்கீரமங்கலம் ரெத்தினமூர்த்தி கூறியதாவது:இப்பகுதியில் நெல் விவசாயம் மட்டும் செய்யப்படுகிறது. கண்மாயை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இக் கண்மாய் மூலம் 50 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயனைடைகின்றனர். கருவேல மரங்கள்ஆக்கிரமித்துள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கிநிற்க வாய்ப்பில்லை. இக் கண்மாய் நிரம்பும் பட்சத்தில் கலுங்கு வழியாக நீர் பெருஞ்சையூர்கண்மாயை சென்றடையும். ஆனால் வரத்துகால்வாய் ஓரமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு சிலருக்கு பட்டா வழங்கியதால் அவர்கள் வேலி அடைத்து மேடாக்கிவிட்டனர். இதனால் மழை காலங்களில் கண்மாயில்இருந்து வெளியேறும் நீர் சின்னக்கீரமங்கலம் குடியிருப்புகளுக்குள் செல்கிறது. ஆகவே மடைகளை சீரமைத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X