சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகன் சாவில் சந்தேகம் போலீசில் தந்தை புகார்  

Added : செப் 10, 2021
Share
Advertisement
திண்டிவனம்:மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஒலக்கூர் அடுத்த பள்ளிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் விநாயகமூர்த்தி, 25. இவருக்கும், சாரம் பகுதியைச் சேர்ந்த இந்துமதி, 22, என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி

திண்டிவனம்:மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஒலக்கூர் அடுத்த பள்ளிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் விநாயகமூர்த்தி, 25. இவருக்கும், சாரம் பகுதியைச் சேர்ந்த இந்துமதி, 22, என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்தனர். கடந்த 7ம் தேதி, தன் குழந்தையை காட்டும்படி விநாயகமூர்த்தி, இந்துமதி வேலை செய்யும் இடத்திற்கு சென்று கேட்டுள்ளார். அவர் மறுத்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.

தன் சாவிற்கு மனைவி, மாமியார் தான் காரணம் என, மொபைல் போனில் 'ஆடியோ' பதிவிட்டுள்ளார்.ஒலக்கூர் போலீசார், சந்தேகம் மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ஏழுமலை, மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X