பொது செய்தி

தமிழ்நாடு

பெண் சமூக பாதுகாப்பில் முக்கியத்துவம்...

Added : செப் 10, 2021
Share
Advertisement
பி.அன்பு குளோரியா, மாவட்ட சமூக நல அலுவலர், சிவகங்கை கூறியதாவது:தாலிக்கு தங்கம் திட்டம் பயனாளிகள் தேர்வுஏழை பெண்கள், விதவைகளின் மகள், விதவை மறுமணம், ஆதரவற்ற பெண், கலப்பு திருமணம் செய்வோருக்கு தாலிக்கு தங்கம் அரசால் வழங்கப்படும்.பெண்களுக்கு எந்தவித நன்மை ஏற்படும்இத்திட்டத்தில் கல்வி தகுதி அதிகம் உள்ளவர்களுக்கு உதவி தொகை அதிகரிக்கின்றன. இதனால் பெண்களுக்கான

பி.அன்பு குளோரியா, மாவட்ட சமூக நல அலுவலர், சிவகங்கை கூறியதாவது:தாலிக்கு தங்கம் திட்டம் பயனாளிகள் தேர்வுஏழை பெண்கள், விதவைகளின் மகள், விதவை மறுமணம், ஆதரவற்ற பெண், கலப்பு திருமணம் செய்வோருக்கு தாலிக்கு தங்கம் அரசால் வழங்கப்படும்.பெண்களுக்கு எந்தவித நன்மை ஏற்படும்இத்திட்டத்தில் கல்வி தகுதி அதிகம் உள்ளவர்களுக்கு உதவி தொகை அதிகரிக்கின்றன. இதனால் பெண்களுக்கான உயர்கல்வி ஊக்குவிக்கப்படும்.தாலிக்கு தங்க பயனாளிகள் எண்ணிக்கை:2020-- 2021 ம் ஆண்டில் 2,230 பேருக்கு ரூ.10.49 கோடி மதிப்பிலான 1 லட்சத்து 54 ஆயிரத்து 980 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளன.எப்படி விண்ணப்பிக்கலாம்இ-- சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் தகுதி குறித்த ஆவணங்களுடன் பதிவு செய்தால், பதிவு முன்னுரிமை அடிப்படையில் தங்கம், உதவி தொகை வழங்கப்படும்.பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் பயன்குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தை இருந்தால், 2 வது குழந்தைக்கு பின் தாய் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். 2 வது குழந்தை பிறந்த 3 ஆண்டுக்கு பின் விண்ணப்பித்தால் இரு பெண் குழந்தைக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும். ஒரு பெண் குழந்தைக்கு பின் குடும்ப கட்டுப்பாடு செய்திருந்தால் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.இத்திட்டத்தின் பயன் என்னடெபாசிட் செய்த பணத்திற்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை வட்டி ரூ.1500 முதல் 1800 கிடைக்கும். இந்த வட்டியை எடுக்காத பட்சத்தில் பெண் குழந்தைக்கு 18 வயதானால் ரூ.1.25 லட்சம் கிடைக்கும். இந்நிதி பெண்ணின் உயர்கல்வி, திருமணத்திற்கு உதவியாக இருக்கும்.பெண் குழந்தைகள் திட்ட பயனாளிகள்2020-21 ம் ஆண்டில் 694 பேருக்கு ரூ.1.74 கோடி டெபாசிட் செய்துள்ளோம்.பெண்கள் வாழ்வாதாரத்திற்கான திட்டம் ஏதும் உண்டாபெண் வாழ்வாதாரத்திற்கு இலவச தையல் இயந்திரம் கிடைக்கும். வட்டார அளவில் விண்ணப்பித்தால், திருமணம் ஆன பெண்கள் பயன்பெறலாம். ஆதரவற்ற, விதவைகள், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் இலவசம். 2020 ல் 100 வழங்கிய நிலையில், 2021 ம் ஆண்டில் 150 தையல் இயந்திரம் வழங்க இலக்கு வைத்துள்ளோம்.திருநங்கைகளுக்கான நலத்திட்டம் உண்டா திருநங்கைகளை அடையாளம் கண்டு பிடித்து 93 பேருக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம். இவர்களுக்கு கொரோனா கால நிவாரணம் ரூ.2000 வழங்கியுள்ளோம். தொழிற் பயிற்சிகள் வழங்க 50 ஆயிரம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்துகிறீர்களாஇந்த ஆண்டு 30 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தியுள்ளோம். மீறி திருமணம் செய்வோர் மீது போலீசார் மூலம் வழக்கு பதிந்துள்ளோம்.மூத்த குடிமக்களை பராமரிக்கிறீர்களாமாவட்டத்தில் உள்ள 5 சேவை இல்லங்கள் மூலம் அரசு உதவியுடன் 165 மூத்த குடிமக்களை பராமரிக்கிறோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X