பொது செய்தி

தமிழ்நாடு

மருதம்பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்புத்துார்--திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் நடுவாற்று மருதம்பிள்ளையார் கோயில் கும்பாபிசேகம் 16 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது.விருசுழியாற்றில் அமைந்துள்ள இக்கோயில் பாடுவார் முத்தப்பரால் பாடல் பெற்ற தலம். இங்கு 16 ஆண்டுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது. தற்போது மீண்டும் புனரமைப்பு பணிகள் செய்து திருப்பணிகள் நடந்தது. மருதம் பிள்ளையார், வனதுர்க்கை,

திருப்புத்துார்--திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் நடுவாற்று மருதம்பிள்ளையார் கோயில் கும்பாபிசேகம் 16 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது.விருசுழியாற்றில் அமைந்துள்ள இக்கோயில் பாடுவார் முத்தப்பரால் பாடல் பெற்ற தலம். இங்கு 16 ஆண்டுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது. தற்போது மீண்டும் புனரமைப்பு பணிகள் செய்து திருப்பணிகள் நடந்தது. மருதம் பிள்ளையார், வனதுர்க்கை, மருதுசுவாமி, பாலமுருகன், முனீஸ்வரர் சன்னதிக்கு திருப்பணி நடந்தது. செப்.,7 ல் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிேஷகம் துவங்கியது. யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9:30 மணிக்கு 4 ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கின.கஜ, கோ, லட்சுமி பூஜைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி காலை 11:20 மணிக்கு விநாயகருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தினர். யாகசாலை பூஜைகளை சாமிநாதன், தண்டாயுதபாணி குருக்கள் செய்திருந்தனர். நாட்டார், நகரத்தார், என்.பத்மநாபன், ராம. கனகு கருப்பையா, வாவாசி தேவர் வகையறாவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X