பொது செய்தி

தமிழ்நாடு

பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவை ஒளிப்பதிவு செய்ய வேண்டும்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சிவகங்கை-ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முழுவதையும் ஒளிப்பதிவு செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளது.தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்கள், காலியாக உள்ளஇடங்களுக்கான தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளது.தேர்தல்

சிவகங்கை-ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முழுவதையும் ஒளிப்பதிவு செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளது.தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்கள், காலியாக உள்ளஇடங்களுக்கான தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளது.தேர்தல் நடத்துவதற்கு தேவையான இட வசதிகள் இருக்கும் பட்சத்தில் தேர்வு செய்யப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் பிற அரசு கட்டடங்களை பயன்படுத்த வேண்டும். பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களின் பட்டியலில் புதிதாக சேர்க்க வேண்டிய இடங்கள் இருந்தால் அது குறித்த விபரங்களை மாவட்ட தேர்தல் பிரிவில் தெரிவிக்க வேண்டும்.இல்லாத பட்சத்தில் இல்லை என்ற அறிக்கையினை வழங்க வேண்டும். பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு தொடக்கம் முதல் இறுதி வரை ஒளிப்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு தேவையான அலுவலர்கள் காலிப்பணியிடங்கள் இல்லாமல் நிரப்பப்படவேண்டும்.ஓட்டு எண்ணிக்கை மையத்தின் வரை படங்கள், மேஜைகள் குறித்த விபரங்களை மாவட்ட தேர்தல் பிரிவில் வழங்க வேண்டும். தேர்தல் நடத்தும் பகுதிகளுக்கான ரகசிய குறியீடு எண் வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும், என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X