பிள்ளையார் பட்டியில் இன்று தீர்த்தவாரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிள்ளையார் பட்டியில் இன்று தீர்த்தவாரி

Added : செப் 10, 2021
Share
பிள்ளயைார்பட்டி--பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியில்லாமல் கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறும். கொரோனா விதிப்படி பக்தர்கள் பங்கேற்பின்றி கோயிலினுள் விழா உற்ஸவங்கள் நடந்து வருகிறது.இன்று விழா நிறைவை முன்னிட்டு பக்தர்கள் பங்கேற்பின்றி
 பிள்ளையார் பட்டியில் இன்று தீர்த்தவாரி

பிள்ளயைார்பட்டி--பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியில்லாமல் கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறும். கொரோனா விதிப்படி பக்தர்கள் பங்கேற்பின்றி கோயிலினுள் விழா உற்ஸவங்கள் நடந்து வருகிறது.இன்று விழா நிறைவை முன்னிட்டு பக்தர்கள் பங்கேற்பின்றி தீர்த்தவாரி காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. உற்ஸவம், சண்டிகேஸ்வரர் வடக்குவாசல் எழுந்தருளலும், அங்குசத்தேவர் படித்துறையில் எழுந்தருளி அபிேஷக, ஆராதானைக்கு பின் தீர்த்தவாரி நடக்கும். பின்னர் கோயிலினுள் உற்ஸவர் எழுந்தருளுவார். மதியம் 1:00 மணி அளவில் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் உற்ஸவர்கள் சண்டிகேஸ்வரர், கற்பகவிநாயகர், சோமஸ்கந்தர், தனி அம்மன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகியோர் எழுந்தருளலும் நடைபெறும். வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X