பஸ்களில் சில்லறை தட்டுப்பாடு போக்குவரத்து ஊழியர்கள் தவிப்பு| Dinamalar

பஸ்களில் சில்லறை தட்டுப்பாடு போக்குவரத்து ஊழியர்கள் தவிப்பு

Added : செப் 10, 2021
Share
திருப்புவனம்--பஸ்களில் சில்லறை தட்டுப்பாட்டால் தினசரி போக்குவரத்து ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது.மதுரையில் இருந்து திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களில் போதிய அளவு சில்லறை கிடைக்காததால் பயணிகளுக்கும்

திருப்புவனம்--பஸ்களில் சில்லறை தட்டுப்பாட்டால் தினசரி போக்குவரத்து ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது.மதுரையில் இருந்து திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களில் போதிய அளவு சில்லறை கிடைக்காததால் பயணிகளுக்கும் கண்டக்டர்களுக்கும் தினசரி தகராறு ஏற்பட்டு வருகிறது.போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில்; டீ கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை பணப்பரிவர்த்தனை முழுவதும் இணையதள வழியாக மாறி விட்டது. இல்லையென்றால் ஸ்வைப் மிஷின் மூலம் பரிமாற்றம் நடைபெறுகிறது. இதனால் சில்லறையே கிடைப்பதில்லை. மதுரையில் இருந்து திருப்புவனத்திற்கு 18 ரூபாய், மானாமதுரைக்கு 41 ரூபாய் கட்டணம், ஆனால் பயணிகள் அனைவரும் 500 ரூபாய், 200 ரூபாய் கொண்டு வந்தால் சில்லறைக்கு நாங்கள் எங்கே போவது என்றனர்.போக்குவரத்து கழகங்களில் கண்டக்டர்களுக்கு போதிய சில்லறை வழங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X