சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் சாய்ந்து ஐந்து பேர் காயம் 

Added : செப் 10, 2021
Share
Advertisement
கோவை;கோவை பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் விழுந்து, 5 பேர் காயமடைந்தனர்.கோவை கலெக்டர் அலுவலகத்துக்கும், எஸ்.பி., அலுவலகத்துக்கும் இடையே எண் 1 இணை சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பத்திரம் பதிய வரும் பொதுமக்கள் காத்திருக்க வசதியாக, எஸ்.பி., அலுவலக காம்பவுண்ட் சுவரை ஒட்டி, தகரஷீட் கொண்டு கூரை கொட்டகை அமைத்துள்ளனர்.நேற்று மதியம் 1:00 மணியளவில், எஸ்.பி., அலுவலக
 பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் சாய்ந்து ஐந்து பேர் காயம் 

கோவை;கோவை பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் விழுந்து, 5 பேர் காயமடைந்தனர்.கோவை கலெக்டர் அலுவலகத்துக்கும், எஸ்.பி., அலுவலகத்துக்கும் இடையே எண் 1 இணை சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பத்திரம் பதிய வரும் பொதுமக்கள் காத்திருக்க வசதியாக, எஸ்.பி., அலுவலக காம்பவுண்ட் சுவரை ஒட்டி, தகரஷீட் கொண்டு கூரை கொட்டகை அமைத்துள்ளனர்.நேற்று மதியம் 1:00 மணியளவில், எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இருந்த மே பிளவர் மரம் முறிந்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் கூரை கொட்டகை மீது விழுந்தது.இதில் பத்திரம் பதிவதற்காக காத்திருந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மே பிளவர் மரத்தின் அடிப்பகுதி உளுத்துப்போன நிலையில், பிடிமானம் இன்றி முறிந்து விழுந்தது தீயணைப்புத்துறையினர் ஆய்வில் தெரியவந்தது. மரத்தை, தீயணைப்பு படை வீரர்கள் வெட்டி அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X