பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி முடியும் நேரத்தை வகுப்புவாரியாக மாற்ற திட்டம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பள்ளிகளில் தினசரி ஆய்வு செய்ய வேண்டுமென, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், தற்போது வரை, 4 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பள்ளி வளாகத்திற்குள், சமூக இடைவெளி கடைபிடித்தல், உடல் வெப்பநிலை பரிசோதித்தல், வகுப்பு வாரியாக இடைவேளை நேரத்தை மாற்றுதல் உள்ளிட்ட, பல்வேறு நிபந்தனைகள்

கோவை:கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பள்ளிகளில் தினசரி ஆய்வு செய்ய வேண்டுமென, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், தற்போது வரை, 4 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பள்ளி வளாகத்திற்குள், சமூக இடைவெளி கடைபிடித்தல், உடல் வெப்பநிலை பரிசோதித்தல், வகுப்பு வாரியாக இடைவேளை நேரத்தை மாற்றுதல் உள்ளிட்ட, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.இது முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை, தினசரி ஆய்வு செய்து, பார்வையிட்ட பள்ளிகள் குறித்த, பட்டியல் அனுப்ப, வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆய்வின் போது, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள, மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, சுழற்சி முறையில் நடக்கும் வகுப்புகள், மாணவர்களின் பெற்றோர் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை கேட்டறிய வேண்டும்.இதோடு, மாணவர்களுக்கான கழிவறை, குடிநீர் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து, நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் கூடுமானவரை, சமூக இடைவெளி பின்பற்றுகின்றனர். வகுப்பறை இருக்கைகளும் இடைவெளி விட்டே போடப்பட்டுள்ளன. ஆனால், பள்ளி நேரம் முடிந்ததும், வீடு திரும்பும் போது தான், சிலர் முறையாக மாஸ்க் அணியாமல், கூட்டமான பேருந்துகளில் பயணம் செய்தல், கடைவீதிக்கு செல்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வகுப்பு வாரியாக, பள்ளி முடியும் நேரத்தை மாற்ற தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X