பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் இடம் பிடிக்க முந்தினார்கள் நோய் தடுப்பு செயலில் பிந்தினார்கள்

Added : செப் 10, 2021
Share
Advertisement
கோவை:தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் பஸ்களில், பயணிகள் முண்டியடித்து இடம் பிடித்தனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தம் விதமாக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இன்று விநாயகர் சதுர்த்தியுடன், சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது.இதனால், கோவையில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், பஸ் ஸ்டாண்ட்களில் திரண்டனர்.
 பஸ்சில் இடம் பிடிக்க முந்தினார்கள் நோய் தடுப்பு செயலில் பிந்தினார்கள்

கோவை:தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் பஸ்களில், பயணிகள் முண்டியடித்து இடம் பிடித்தனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தம் விதமாக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இன்று விநாயகர் சதுர்த்தியுடன், சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது.இதனால், கோவையில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், பஸ் ஸ்டாண்ட்களில் திரண்டனர். நேற்று முன்தினம் இரவு, சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட ஊர்களுக்கு பயணிகள் அடித்து பிடித்து பஸ் ஏறினர்.கோவை மண்டலத்தில், 1,100க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. நோயை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது, 900 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்டத்துக்கு ஏற்ப, பஸ் டிப்போக்களில் இருந்து நேற்று முன்தினம் இரவு, கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.இருப்பினும், பஸ்களில் இடம் பிடிக்க சமூக இடைவெளி, மாஸ்க் உள்ளிட்ட நோய் தடுப்பு அம்சங்களை பயணிகள் மறந்தனர்.காந்திபுரம், உக்கடம் பஸ் ஸ்டாண்ட்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. எனவே, பயணிகள் நோய் தடுப்பு அம்சங்களை கடைபிடிக்க, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X