அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டைமிங் காமெடி' சபையில் கலகலப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
சென்னை:சட்டசபையில், முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ், தீயணைப்பு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசினர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச வேண்டும் என்பதால், அனைவருக்கும், 10 நிமிடங்கள் மட்டுமே பேச வாய்ப்பு வழங்கப் பட்டது. ஆனால், முதல்வரை கவர வேண்டும் என்பதற்காக, கூட்டணி கட்சிகளின்

சென்னை:சட்டசபையில், முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ், தீயணைப்பு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசினர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச வேண்டும் என்பதால், அனைவருக்கும், 10 நிமிடங்கள் மட்டுமே பேச வாய்ப்பு வழங்கப் பட்டது. ஆனால், முதல்வரை கவர வேண்டும் என்பதற்காக, கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், கூடுதல் நேரம் பேசினர்.

இதனால் அவ்வப்போது, மணியை அடித்து பேச்சை முடிக்கும்படி, சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார்.

பா.ஜ., தரப்பில் நயினார் நாகேந்திரன் பேசும்போது, சபாநாயகர் மணியை அடித்தார். உடனே நாகேந்திரன், தனக்கு அருகே அமர்ந்திருந்த பா.ம.க., - ஜி.கே.மணியை பார்த்து, ''எனக்கு அருகே பாட்டாளி மணி இருக்கிறது,'' என்று கூறினார்.

உடனே சபாநாயகர், ''இந்த மணியை அடித்தால் தவறில்லை. பா.ம.க., மணியை அடித்தால் குற்றம்; கிரிமினல் கேஸ். இந்த மணி அடித்தால் நீங்கள் உட்கார வேண்டும்,'' என்றார். இதை கேட்டு, முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X