இதுவரை ரூ.6.90 கோடி அபராத வசூல் அபாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதுவரை ரூ.6.90 கோடி அபராத வசூல் அபாரம்

Added : செப் 10, 2021
Share
கோவை:கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிகளை பின்பற்றாதவர்களிடம் இதுவரை, 6.90 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருக்கும் பொதுமக்கள், வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருப்பது, கடைகள், வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களை கூட்டமாக இருக்க

கோவை:கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிகளை பின்பற்றாதவர்களிடம் இதுவரை, 6.90 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருக்கும் பொதுமக்கள், வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருப்பது, கடைகள், வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களை கூட்டமாக இருக்க அனுமதிப்பது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் கூடுதலாக கடையை திறந்திருப்பது ஆகியவற்றுக்கு, வருவாய், போலீஸ், சுகாதாரம், உள்ளாட்சித்துறையினர், அபராதம் விதிக்கின்றனர்.இந்த வகையில், மார்ச் 1 முதல் நேற்று வரை, கோவை மாவட்டத்தில் 6.90 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 5.27 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். 'அபராதம் விதிக்கும் பணி தொடர்ந்து நடந்தாலும், விதிமீறல்கள் குறைந்தபாடில்லை' என்று, அதிகாரிகள் வருத்தப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X