அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதுநிலை ஆசிரியர் பணி நவம்பரில் தேர்வு அறிவிப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
சென்னை:அரசு பள்ளிகளில் ௨,௨௦௭ முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு:அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், கணினி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பதவிகளில் 2,207 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு உரிய முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு கணினி வழியில்

சென்னை:அரசு பள்ளிகளில் ௨,௨௦௭ முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு:அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், கணினி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பதவிகளில் 2,207 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு உரிய முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு கணினி வழியில் போட்டி தேர்வு நடத்தப்படும்.

இந்த தேர்வு நவம்பர் 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கும். தேர்வில் பங்கேற்க விரும்புவோர், வரும் 16ம் தேதி முதல், 'ஆன்லைன்' வழியில் அக்., 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ் 277; ஆங்கிலம், 193; கணிதம் 115; இயற்பியல் 97; வேதியியல் 194; தாவரவியல் 92; விலங்கியல் 110; வணிகவியல் 313; பொருளியல் 291; வரலாறு 118; புவியியல் 12; அரசியல் அறிவியல் 14; மனை அறிவியல் இந்திய கலாசாரம் தலா 3; உயிர் வேதியியல் 1; ஆகிய பணியிடங்களுக்கு நியமனம் மேற்கொள்ளப்படும்.உடற்கல்வி இயக்குனர் நிலை- - 1 என்ற பதவியில் 39; கணினி ஆசிரியர்கள், 44 பேர்; தெலுங்கு 3; கன்னடம் 2; உருது பாடங்களில் 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இது தவிர, சென்னை மாநகராட்சி பள்ளிகளில், தமிழ் 7; ஆங்கிலம், கணிதம் 5; இயற்பியல், வணிகவியல், மனை அறிவியல், வரலாறு, உடற்கல்வி தலா 1; வேதியியல் 2; தாவரவியல் 4; விலங்கியல் 2; பொருளியல் 4 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.மேலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 11; அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 235; பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் ஒன்று என, பின்னடைவு காலியிடங்களும், இந்த தேர்வின் வழியே நிரப்பப்பட உள்ளன. விபரங்களை, trb.tn.nic.in/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X