திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற வேண்டும் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற வேண்டும்'

Added : செப் 10, 2021
Share
சென்னை:'திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: கடந்த 4ம்தேதி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற, 24 வயது இளம் ஆயுதப் படை போலீஸ்காரர், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை:'திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:

கடந்த 4ம்தேதி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற, 24 வயது இளம் ஆயுதப் படை போலீஸ்காரர், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார்.விசாரணையில், 'ஆன்லைன்' சூதாட்டம் என்ற ஆக்டோபசின் கொடுங்கரங்களுக்குள் சிக்கிய வேலுச்சாமி, நுாலிழையில் உயிர் தப்பிஇருக்கிறார்.

ஏற்கனவே, விழுப்புரத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தற்கொலை செய்தார்.ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்த பின், பல வகையான ஆன்லைன் சூதாட்டங்கள், இளைஞர்களின் வாழ்க்கையை முன்பை விட வேகமாக சூறையாடிக் கொண்டிருக்கின்றன.

நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில், திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்றுவது தான் இதற்கு தீர்வு.

இதை, சென்னை உயர் நீதிமன்றமும் இரு தருணங்களில் உறுதி செய்திருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட முன்வரைவை, நடப்பு சட்டசபை கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X