பொது செய்தி

தமிழ்நாடு

நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம்

Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குன்னுார்:தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம், நேற்று குன்னுாரில் நடந்தது.நாட்டிலேயே முதல் முறையாக, 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின், 8.9 கோடி ரூபாய் மதிப்பில், திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு, இரு பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது.பொன்மலை பணிமனை தொழிற்சாலை உதவி
 நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம்

குன்னுார்:தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம், நேற்று குன்னுாரில் நடந்தது.

நாட்டிலேயே முதல் முறையாக, 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின், 8.9 கோடி ரூபாய் மதிப்பில், திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு, இரு பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது.பொன்மலை பணிமனை தொழிற்சாலை உதவி மேலாளர் சுப்ரமணியம் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இன்ஜின் குன்னுார் வந்தபோது, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறுகையில், ''ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய இன்ஜினை போன்று, தமிழகத்தில் தயாரித்த எக்ஸ் கிளாஸ் நிலக்கரி நீராவி இன்ஜின் பெருமை அளிக்கிறது. விரைவில் சுற்றுலா பயணியரின் பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
11-செப்-202111:37:50 IST Report Abuse
JeevaKiran கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. முன்பிருந்தது போல் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு (இதேபோல் மறு புறத்திலும்) இன்னொரு ட்ரிப் ரயிலை இயக்கினால் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெரிசலின்றி இயற்கை அழகை ரசித்து பயணிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X