அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோடநாடு உண்மை தெரிஞ்சாகணும்'

Added : செப் 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:''கோடநாடு விவகாரத்தில் அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், உண்மை நிலை மக்களுக்கு தெரிய வேண்டும்,'' என, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி:எந்த ஒரு அரசாக இருந்தாலும், அதன் செயல்பாடுகளை அறிய ஆறு மாதங்கள் தேவை. எனவே, தி.மு.க., அரசின் செயல்பாடுகள் பற்றி, பின்னரே கருத்து சொல்ல

திண்டுக்கல்:''கோடநாடு விவகாரத்தில் அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், உண்மை நிலை மக்களுக்கு தெரிய வேண்டும்,'' என, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி:எந்த ஒரு அரசாக இருந்தாலும், அதன் செயல்பாடுகளை அறிய ஆறு மாதங்கள் தேவை. எனவே, தி.மு.க., அரசின் செயல்பாடுகள் பற்றி, பின்னரே கருத்து சொல்ல முடியும். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியே, தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக முதல்வர் சுட்டிக் காட்டும் திருத்தங்களுக்கு, மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்.

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவே, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கோடநாடு விவகாரத்தில், ஏராளமான அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்துஉள்ளன. நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் பட்சத்தில், அதை எதிர்கொள்ள அ.தி.மு.க.,வினர் ஏன் தயங்க வேண்டும்.

கோடநாடு விவகாரத்தில், மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும்? உள்ளாட்சித் தேர்தலில் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X