வேன் மீது லாரி மோதி நான்கு பெண்கள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் மீது லாரி மோதி நான்கு பெண்கள் பலி

Added : செப் 10, 2021
Share
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே, வேன் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதிய விபத்தில், நான்கு பெண்கள் பலியாகினர்; 10 பேர் படுகாயம் அடைந்தனர்.துாத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் உலர் பூ தயாரிக்கும் நிறுவனத்தில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பணியாற்றுகின்றனர். தினமும் காலை 6:00 மணிக்கு வேனில் அழைத்து வரப்படுபவர்கள் மாலையில் வீடு
 வேன் மீது லாரி மோதி நான்கு பெண்கள் பலி

துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே, வேன் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதிய விபத்தில், நான்கு பெண்கள் பலியாகினர்; 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

துாத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் உலர் பூ தயாரிக்கும் நிறுவனத்தில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பணியாற்றுகின்றனர். தினமும் காலை 6:00 மணிக்கு வேனில் அழைத்து வரப்படுபவர்கள் மாலையில் வீடு திரும்புவர்.நேற்று காலை 6:00 மணிக்கு ஆட்களை ஏற்றி வேன் சென்றது; பாபு, 26 ஓட்டினார். சில்லாநத்தம் அருகே சென்ற போது, துாத்துக்குடி சாலையில் எதிரே வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி, வேன் மீது மோதியது.

இதில், வேன் முழுதும் நொறுங்கியது.வேனில் இருந்த 40 - 48 வயதுடைய மூன்று பெண்கள் அதே இடத்தில் இறந்தனர். காயமுற்ற 10 பேர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, 20 வயது பெண் இறந்தார். லாரி டிரைவர் பண்டாரம் கைது செய்யப்பட்டார். புதியம்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X