பொது செய்தி

இந்தியா

ஆர்.எஸ்.எஸ்., தலைவருடன் அமெரிக்க துாதர் சந்திப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை, இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் அதுல் கேஷப் சந்தித்து பேசினார்.இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயரான எரிக் கார்செட்டியை நியமித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்தார். அவரது நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டி உள்ளது. அதற்கான ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என

புதுடில்லி:ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை, இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் அதுல் கேஷப் சந்தித்து பேசினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயரான எரிக் கார்செட்டியை நியமித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்தார். அவரது நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டி உள்ளது. அதற்கான ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தற்காலிக துாதராக, பதவி வகித்து வந்த அதுல் கேஷப்பின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால், அவர் அமெரிக்காவுக்கு திரும்ப உள்ளார். இந்திய வம்சாவளியான இவர், கடந்த சில நாட்களில் தனிப்பட்ட முறையில் பல்வேறு நபர்களை சந்தித்து பேசி உள்ளார்.அதன் ஒரு கட்டமாக, காங்., கட்சியின் பொதுச் செயலர் பிரியங்காவை சந்தித்தார். அவருடன் எடுத்த புகைப்படத்தையும் 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை நேற்று முன்தினம் சந்தித்தார். அந்த சந்திப்பில் இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்து இருவரும் கலந்துரையாடியதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


ஹிந்து அமைப்பு கண்டனம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உட்பட இடது சாரி ஆர்வலர்கள் இணைந்து, 'உலகளாவிய ஹிந்துத்துவாவை அகற்றுதல்' என்ற தலைப்பின்கீழ் மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், இதற்கு ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 'இதுபோன்ற நிகழ்வுகள் ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தும்' என, அச்சம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X