பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
காபூல்:பெண்கள் போராட்டம் குறித்த செய்தியை சேகரித்த இரண்டு பத்திரிகையாளர்களை பிடித்து, அவர்களை உள்ளாடையுடன் நிற்க வைத்து தலிபான் பயங்கரவாதிகள் கொடூரமாக தாக்கியுள்ளனர். அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிவிட்ட நிலையில் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலிபான் பயங்கரவாதிகள் கையில் மீண்டும் சிக்கியுள்ளது. தொடர்கதை ஆப்கனில் 1990களில் நடந்த தலிபான்கள் ஆட்சி

காபூல்:பெண்கள் போராட்டம் குறித்த செய்தியை சேகரித்த இரண்டு பத்திரிகையாளர்களை பிடித்து, அவர்களை உள்ளாடையுடன் நிற்க வைத்து தலிபான் பயங்கரவாதிகள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிவிட்ட நிலையில் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலிபான் பயங்கரவாதிகள் கையில் மீண்டும் சிக்கியுள்ளது.


தொடர்கதை



ஆப்கனில் 1990களில் நடந்த தலிபான்கள் ஆட்சி யில் கொடூர சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன, பெண்கள் சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டது. ஆப்கனில் மீண்டும் அந்த கொடூர ஆட்சி அரங்கேறும் என்ற அச்சத்தில் அந்நாட்டிலிருந்து பலர் வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.எனினும் ஆப்கனில் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஈடுபட்டுள்ள தலிபான்கள், 'ஆப்கனில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும்' என, உறுதியளித்தனர். ஆனால் அதற்கு மாறாக பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி உள்ளது.


கொடுமை

இந்நிலையில் பத்திரிகையாளர்களை தலிபான்கள் தாக்கிய இரண்டு புகைப்படங்களை 'லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்' பத்திரிகையாளர் மார்கஸ் யாம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இரண்டு பத்திரிகையாளர்கள் உள்ளாடையுடன் நிற்க வைக்கப்பட்டு பின்புறத்திலிருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. அவர்களது உடலில் காயங்கள் காணப்படுகின்றன.

தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களான தகி தர்யாபி மற்றும் நெமத்துல்லா நக்தி ஆகியோர் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என, 'எதிலாட்ரோஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துஉள்ளது.'மேற்கு காபூல் கார்ட்-இ-சார் பகுதியில் பெண்கள்நடத்திய போராட்டம் குறித்த செய்தியை இருவரும் சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தலிபான்கள் கடத்தி சென்று அறையில் அடைத்து வைத்து தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர்' என, எதிலாட்ரோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X