டில்லி அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய மாநாட்டு கட்சி பிரமுகர் மர்ம சாவு

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் திரிலோசன் சிங் வாசிர், 67, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜம்முவை சேர்ந்தவர் திரிலோசன் சிங் வாசிர்; தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர். டில்லிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வாசிர் வந்தார்.புகார்மேற்கு டில்லியின் மோதி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு
 டில்லி அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய மாநாட்டு கட்சி பிரமுகர் மர்ம சாவு

புதுடில்லி:டில்லியில் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் திரிலோசன் சிங் வாசிர், 67, மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜம்முவை சேர்ந்தவர் திரிலோசன் சிங் வாசிர்; தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர். டில்லிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வாசிர் வந்தார்.புகார்மேற்கு டில்லியின் மோதி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஹர்ப்ரீத் சிங் என்பவர் தங்கியிருந்தார்.

கடந்த 2ம் தேதி அவர் வட அமெரிக்க நாடான கனடாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.ஆனால் கடந்த சில நாட்களாக அவரிடமிருந்து எந்த தகவலும், ஜம்முவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு வரவில்லை. இதையடுத்து, ஜம்மு போலீசில் குடும்பத்தினர் புகார் செய்தனர். டில்லி போலீசாருக்கு ஜம்மு போலீசார், இது பற்றி தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையில் மோதி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உடலை கைப்பற்றிய போலீசார், அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


காணவில்லை

விசாரணையில், இறந்து கிடந்தவர் திரிலோசன் சிங் வாசிர் என்பது தெரிந்தது. அவருடன் தங்கியிருந்த ஹர்ப்ரீத் சிங்கை காணவில்லை.இது பற்றி போலீசார் கூறுகையில், 'பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் தான், வாசிர் எப்படி இறந்தார் என்பதை உறுதிப்படுத்த முடியும். அவருடன் தங்கியிருந்த ஹர்ப்ரீத் சிங்கை தேடி வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X