தலிபான் செய்திக்கு பாக்ஸ்

Added : செப் 10, 2021
Share
Advertisement
மரணத்தின் பிடியில் ஒரு லட்சம் மக்கள்உலகின் பல்வேறு நாடுகளில் மருத்துவ சேவை புரிந்து வரும், எம்.எஸ்.எப்., எனப்படும் 'மெடிக்கல் சான்ஸ் பிரான்டியர்ஸ்' அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதை தொடர்ந்து பிற நாடுகளைச் சேர்ந்த மருத்துவ சேவை அமைப்புகள், நாட்டை விட்டு வெளியேறின.இதுமட்டுமல்லாமல் ஆப்கனில் உள்ள மருத்துவ

மரணத்தின் பிடியில் ஒரு லட்சம் மக்கள்

உலகின் பல்வேறு நாடுகளில் மருத்துவ சேவை புரிந்து வரும், எம்.எஸ்.எப்., எனப்படும் 'மெடிக்கல் சான்ஸ் பிரான்டியர்ஸ்' அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதை தொடர்ந்து பிற நாடுகளைச் சேர்ந்த மருத்துவ சேவை அமைப்புகள், நாட்டை விட்டு வெளியேறின.இதுமட்டுமல்லாமல் ஆப்கனில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.

எனினும் அவர்கள் மக்களுக்காக சேவை புரிய தயாராக உள்ளனர்.அத்தியாவசிய மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள, 2,300 கிளினிக்குகளில் 90 சதவீத கிளினிக்குகள் இயங்காமல் உள்ளன.

இதன் விளைவாக நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஒரு லட்சம் நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கன் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க, எந்த நாடும் முன்வராமல் உள்ளது வேதனை அளிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X