புயலால் பாதிப்பு: இழப்பீடு கோரி வழக்கு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புயலால் பாதிப்பு: இழப்பீடு கோரி வழக்கு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : செப் 10, 2021
Share
மதுரை:நிவார் புரவி புயலால் பயிர் பாதிப்பிற்கு இழப்பீடு கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் சுந்தர விமல்நாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:காவிரி டெல்டா மண்டலத்தில் 2020 டிசம்பரில் நிவார் மற்றும் புரவி புயலின்போது கன மழை பெய்தது. பயிர்கள்

மதுரை:நிவார் புரவி புயலால் பயிர் பாதிப்பிற்கு இழப்பீடு கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் சுந்தர விமல்நாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:காவிரி டெல்டா மண்டலத்தில் 2020 டிசம்பரில் நிவார் மற்றும் புரவி புயலின்போது கன மழை பெய்தது. பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தன. புயலால் 2 லட்சத்து 64 ஆயிரத்து 858 எக்டேரில் பயிர்கள் சேதமடைந்தன. பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர்.

பயிர் சேதத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இழப்பீடு வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நடவடிக்கை இல்லை.2020-21 ல் குருவை சம்பா தாளடி பருவ பயிர் பாதிப்பிற்கு காவிரி டெல்டா மண்டலம் மற்றும் இதர தென்மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பட்டுவாடா செய்ய வேண்டும்.

விவசாயிகள் அணுகுவதற்கு ஏற்ப காப்பீட்டு நிறுவன குறைதீர்ப்பு மையங்களை மாவட்டம் தோறும் அமைக்க வேண்டும். விவசாயிகளின் குறைகளை தீர்க்க தேசிய அளவில் கண்காணிப்பு மையம் அமைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுந்தர விமல்நாதன் மனு செய்தார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி கே.முரளிசங்கர் அமர்வு மத்திய வேளாண்துறை செயலாளர் மாநில வேளாண்துறை செயலாளர் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்.28 க்கு ஒத்திவைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X