பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து மானியக்கோரிக்கையில் தொழிலாளர் நலன் அறிவிப்புகள் இல்லை: ஊழியர்கள் அதிருப்தி

Added : செப் 10, 2021
Share
Advertisement
மதுரை:'அரசு போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் நலன் சார்ந்து அவ்வித அறிவிப்புகளும் இல்லாதது வேதனையளிக்கிறது' என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்எச்.எம்.எஸ்., சங்கம் சார்பில்தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மதுரையில் இக்கிளைகவன ஈர்ப்பு தீர்மானக் கூட்டம் மாவட்டதலைவர் செல்லத்துரை தலைமையில்

மதுரை:'அரசு போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் நலன் சார்ந்து அவ்வித அறிவிப்புகளும் இல்லாதது வேதனையளிக்கிறது' என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்எச்.எம்.எஸ்., சங்கம் சார்பில்தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரையில் இக்கிளைகவன ஈர்ப்பு தீர்மானக் கூட்டம் மாவட்டதலைவர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. ஆலோசகர் அங்குசாமி வரவேற்றார். தீர்மானங்களை விளக்கி பொதுச் செயலாளர் ஷாஜஹான் பேசியதாவது:போக்குவரத்து துறையில் பணியில் உள்ள 1.40 லட்சம் தொழிலாளர்கள், 60 ஆயிரம் ஓய்வூதியர்கள் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் எவ்வித அறிவிப்பும் இல்லாதது வேதனையளிக்கிறது.

14வது ஊதியக் குழு ஒப்பந்தம், பணியாளர்நியமனம், 240 நாட்கள் பணி நிறைவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம், கூடுதல் பணிக்கு கூடுதல் சம்பளம், தேர்தல் அறிக்கையில் கூறியது போல் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இல்லை.மேலும் ஓய்வூதியர்களுக்கு சிறப்பு மருத்துவ திட்டம், ஓய்வூதியர்களுக்கு 70 மாதங்களாக அகவிலைப் படி வழங்காத நிலை குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை.

நிதி ஆதாரத்தை பெருக்க, நிர்வாகத்தை சீரமைக்க எட்டு மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட எங்களின் கோரிக்கை எதுவும் கண்டுகொள்ளப் பட வில்லை என்றார். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் ரவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X