பொது செய்தி

இந்தியா

தமிழகத்துக்கு ரூ.183 கோடி விடுவித்தது மத்திய அரசு

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுடில்லி:மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறை நிதியின் கீழ் தமிழகத்திற்கு ஆறாவது தவணையாக, 183 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்தது.மத்திய - மாநில அரசு களுக்கிடையே வருவாயைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான பரிந்துரைகளை, மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிதியை வழங்குவதற்கு நிதிக் குழு பரிந்துரை

புதுடில்லி:மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறை நிதியின் கீழ் தமிழகத்திற்கு ஆறாவது தவணையாக, 183 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்தது.

மத்திய - மாநில அரசு களுக்கிடையே வருவாயைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான பரிந்துரைகளை, மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிதியை வழங்குவதற்கு நிதிக் குழு பரிந்துரை செய்கிறது. அவ்வாறு வழங்கப்படும் நிதி மாநிலங்களின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவுகிறது.

அதன்படி, 15-வது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் தவணை முறையில் விடுவித்து வருகிறது. அந்த வகையில் ஆறாவது தவணையாக தமிழகம் உட்பட 17 மாநிலங்களுக்கு 9,871 கோடி ரூபாயை வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக மத்திய அரசு நேற்று விடுவித்தது.

இதில் தமிழகத்துக்கு ஆறாவது தவணையாக 183.67 கோடி ரூபாய் நிதியை மத்திய நிதி அமைச்சகம் விடுத்துஉள்ளது.மேலும் 15-வது நிதிக் குழு பரிந்துரைத்த ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 452 கோடி ரூபாய் நிதியில், தமிழகம், ஆந்திரா, அசாம், ஹரியானா, ஹிமாசலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு இதுவரை ஆறு தவணைகளையும் சேர்த்து 59 ஆயிரத்து, 226 கோடி ரூபாய் நிதி விடுக்கப்பட்டுள்ளது. 'மொத்தம் 12 தவணைகளில் ஒட்டு மொத்த தொகையும் விடுவிக்கப்படும்' என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X