சம்பவம் செய்தி

தமிழ்நாடு

400 ஆண்டு பழமையான சுடுமண் விநாயகர் சிற்பம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமையான சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கீழ்பையூரில் கள ஆய்வு மேற்கொண்டனர். கோவிந்தசாமி என்பவர் வீட்டில் சுடுமண் விநாயகர்சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர்.இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்
 400 ஆண்டு பழமையான  சுடுமண் விநாயகர் சிற்பம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமையான சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கீழ்பையூரில் கள ஆய்வு மேற்கொண்டனர். கோவிந்தசாமி என்பவர் வீட்டில் சுடுமண் விநாயகர்சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர்.இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

இந்த சுடுமண் விநாயகர்சிற்பம் 400 ஆண்டுகள் பழமையானது. இரண்டு அங்குல உயரமே உள்ள இச்சிலையின் தலை உச்சியில் குடை சொருகுவதற்கான துளை உள்ளது. துதிக்கை வலம்புரியாக உள்ளது. அடிப்பகுதிகுழிவாக உள்ளது. சுடுமண் சிற்பம் என்பது அரிதான ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தியையொட்டி கிடைத்த இந்த சுடுமண் விநாயகர் சிற்பம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X