பொது செய்தி

இந்தியா

'கர்னால் விவகாரத்தில் தவறு செய்தோர் மீது நடவடிக்கை' - ஹரியானா அரசு அறிவிப்பு

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சண்டிகர்-'கர்னாலில் நடந்த போராட்டம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும். இதில் தவறு செய்தோர், அதிகாரிகளாக இருந்தாலும், விவசாயிகளாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஹரியானா அரசு அறிவித்துள்ளது.ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு

சண்டிகர்-'கர்னாலில் நடந்த போராட்டம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும். இதில் தவறு செய்தோர், அதிகாரிகளாக இருந்தாலும், விவசாயிகளாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஹரியானா அரசு அறிவித்துள்ளது.



latest tamil news


ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் விவசாய அமைப்புகளை சேர்ந்தோர், ஒன்பது மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பதற்றம்இந்நிலையில், கர்னாலில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சமீபத்தில் முதல்வர் மனோகர்லால் கட்டார் வந்தார். முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி பேரணியாக வந்த விவசாயிகளை தடியடி நடத்தி போலீசார் விரட்டி அடித்தனர். இந்நிலையில், விவசாயி கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து, கர்னாலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, விவசாய அமைப்புகள் நேற்று முன்தினம் துவக்கின. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. விவசாய அமைப்புகளுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய இரண்டு சுற்று பேச்சுகளும் தோல்வியில் முடிந்தன.

இது குறித்து விவசாய அமைப்புகள் கூறுகையில், 'கர்னாலில் நடந்த தடியடிக்கு காரணமானோர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 'விவசாயிகளின் மண்டையை உடையுங்கள் எனக் கூறிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆயுஷ் சின்ஹாவை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்' என்றனர்.


latest tamil news



முடக்கம்

ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது:கர்னால் விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தவறு செய்தோர், அதிகாரிகளாக இருந்தாலும், விவசாயிகளாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடத்தாமல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், கர்னால் மாவட்டத்தின் 'மொபைல் இன்டர்நெட்' சேவைகளை மாநில அரசு முடக்கி வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Madurai,இந்தியா
10-செப்-202107:15:07 IST Report Abuse
தமிழன் இப்போ அடிமைகள்... விவசாயி, முதுகெலும்பு, நாட்டுக்கு சோறு, மோடி ஒய்க, சங்கீன்னு வார்தைகளோட கிளம்பும். கவனிச்சு பாத்தா உள்ளே சில மைனாரிட்டியோட தலை மறைஞ்சுருக்கும். சுயமா சிந்திக்க முடியாத தமிழனும் அவனுகளோட சேந்து வாலாட்டிக்கொண்டிருப்பான்.
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
10-செப்-202111:52:35 IST Report Abuse
தஞ்சை மன்னர் நல்ல மூக்கு முட்ட தின்னு புட்டு என்ன சொல்லுறது என்ற புரியாதவன் எழுதும் வார்த்தை இது அந்த சாப்பாடு எப்படி வருதுன்னு தெரியாமலே கருது போடும் நீயெல்லாம் இருந்தேன்ந லாபம்...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-செப்-202105:36:08 IST Report Abuse
Kasimani Baskaran வேலையை விட்டுவிட்டு 9 மாதம் போராடுகிறார்கள் என்றால் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று அர்த்தம். நிலமே இல்லாதவனெல்லாம் விவசாயி என்று சொன்னால் நாடு தாங்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X