கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணையை முடிக்க அவகாசம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுடில்லி:நாமக்கல் தலித் இளைஞர் கோகுல் ராஜ் படுகொலை வழக்கு விசாரணையை முடிக்க மதுரை விசாரணை நீதிமன்றத்துக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகத்தின் நாமக்கல்லை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல் ராஜின் உடல் 2015 ஜூனில் பள்ளிப்பாளையம் ரயில் பாதை அருகே கண்டெடுக்கப்பட்டது. வேறு ஜாதிப் பெண்ணை காதலித்ததால் தன் மகன் படுகொலை

புதுடில்லி:நாமக்கல் தலித் இளைஞர் கோகுல் ராஜ் படுகொலை வழக்கு விசாரணையை முடிக்க மதுரை விசாரணை நீதிமன்றத்துக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தின் நாமக்கல்லை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல் ராஜின் உடல் 2015 ஜூனில் பள்ளிப்பாளையம் ரயில் பாதை அருகே கண்டெடுக்கப்பட்டது. வேறு ஜாதிப் பெண்ணை காதலித்ததால் தன் மகன் படுகொலை செய்யப்பட்டதாக கோகுல் ராஜின் தாயார் குற்றஞ்சாட்டினார்.இந்த வழக்கில் யுவராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

குற்றவாளி யுவராஜ் உள்ளிட்டோருக்கு 'ஜாமின்' வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு 2017ல் ரத்து செய்தது. கோகுல் ராஜ் தாயாரின் வேண்டுகோளை ஏற்று மதுரை நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

யுவராஜ் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். மனுவை நிராகரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.இந்நிலையில் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கும்படி மதுரை விசாரணை நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இதை ஏற்று மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X