பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அந்த மேலிடம் யார்?

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:சி.கலாதம்பி, பட்டுக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'மது குறித்து பேசினால், 'இமேஜ்' போய்விடுமே...' என்ற அச்சம் இருப்பதால், 'டாஸ்மாக்' கடைகளில் நடக்கும் கொள்ளையை யாரும் கண்டுகொள்வதில்லை.கசப்பாக இருந்தாலும் சில உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்; வேறு
இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



சி.கலாதம்பி, பட்டுக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'மது குறித்து பேசினால், 'இமேஜ்' போய்விடுமே...' என்ற அச்சம் இருப்பதால், 'டாஸ்மாக்' கடைகளில் நடக்கும் கொள்ளையை யாரும் கண்டுகொள்வதில்லை.

கசப்பாக இருந்தாலும் சில உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்; வேறு வழியில்லை.தமிழகத்தில் இனி மது விலக்கு என்பது சாத்தியமில்லை. மதுவிற்கு தடை விதித்தால், மாற்று வழியில் போதை தேடும் தலைமுறை உருவாகி விட்டது. அது மிக ஆபத்தானது. எனவே மது விற்பனை தொடரும்.குழந்தை பிறப்பு முதல், மரணம் நிகழ்ந்த வீடு வரை எல்லா நிகழ்வுகளிலும் மது இடம்பிடித்து விட்டது. டாஸ்மாக் கடைகளில் மது வெள்ளம் பாய்ந்தோடுகிறது.ஆகவே, மது இல்லாத தமிழகம் இனி இல்லை என்பதை அனைவரும் முதலில் ஏற்க வேண்டும்.

சரி, விஷயத்திற்கு வருவோம்... தற்போது டாஸ்மாக் கடையில் அதிகபட்ச விலையை விட ௧ குவார்ட்டர் பாட்டிலுக்கு, கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் பகிரங்கமாக கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.தமிழகத்தில் 5,000த்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒரு கடையில், ஒரு மாதத்திற்கு 3.12 லட்சம் ரூபாய் கறுப்பு பணம் சேர்கிறது. அப்படியென்றால், தமிழகம் முழுதும் 170 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு 2,028 கோடி ரூபாய்!இவ்வளவு தொகை யாருக்கு போகிறது?


latest tamil news


மது விற்பனையாளர்களை கேட்டால், 'மேலிடத்திற்கு செல்கிறது' என சொல்கின்றனர். இந்த முறைகேட்டை, 'ஆன்லைன்' மது விற்பனை வாயிலாக தடுக்க முடியும். மேலும், ஆன்லைன் விற்பனை பல்வேறு பயன்களும் உண்டு.மது அருந்துவோர் வயது உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு மது கிடைப்பதை தடுக்க இயலும்.மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் தான் சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன. ஆன்லைன் விற்பனையால் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.இன்னும் சொல்வதென்றால், வீட்டில் அமர்ந்து மது அருந்துவதால், பொதுவெளியில் சமூக குற்றங்கள் நடப்பதும் பெருமளவு குறையும்.

டாஸ்மாக் கடையில் கூட்டம் குறையும்; கொரோனா பரவலையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.ஆன்லைன் மது விற்பனை, முறைகேட்டை தடுப்பதுடன், எண்ணற்ற நல்ல விஷயங்களையும் செய்யும்.அப்படி இருக்கும்போது, 'ஆன்லைன் மது விற்பனை செய்யும் எண்ணம் இல்லை' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது என்றால், என்ன அர்த்தம்?டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறும் அந்த மேலிடம் யார்?

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
11-செப்-202100:30:52 IST Report Abuse
Anantharaman Srinivasan மேலிடம் என்றால் அந்தந்த ஏரியா மந்திரி M L A மாவட்ட செயலாளருக்கு பங்கு. எலெக்ஷனுக்கு செலவு செய்த கோடிகளை வசூலிக்க இது ஒரு வகை. மற்ற மேல்மட்ட கட்சிகாரன் குத்தகைக்கு பார் நடத்துவான்.
Rate this:
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
10-செப்-202123:13:20 IST Report Abuse
KumariKrishnan Bjp மதுவை நிறுத்த முடியாது என்பதை ஏற்க இயலாது கொரோனாவில் 6மாதம் தொடர்ந்து மதுவிலக்கு இருந்தது யாரும் சாகவில்லை அந்தநிலை தொடர இயலும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-செப்-202120:41:40 IST Report Abuse
Ramesh Sargam மதுவினால் வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு என்பது இந்த மது விட்பனை கொள்ளையினால் தெள்ள தெளிவாக புரிகிறது. முன்பெல்லாம் 'குடி குடியை கெடுக்கும்' என்று கூறுவார்கள். இப்பொழுது, 'மது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்' என்று ஆகி விட்டது. என்னதான் நாம் மதுவிலக்கு என்று கூக்குரல் எழுப்பினாலும், 'செவிடன் காதில் சங்கு ஊதியது போல' இந்த அரசு கண்டுகொள்ளவே கொள்ளாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X