சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ப.வேலூர் அருகே பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ப.வேலுார் தாலுகாவில் கொந்தளம் உயர்நிலைப்பள்ளி உள்ளது. ஒன்பது பத்தாம் வகுப்புகளுக்காக பள்ளி செயல்பட்டு வருகிறது. பல மாதங்களாக பள்ளி செயல்படாமல் இருந்ததால் வளாகத்தில் இருந்த பெரும்பாலான தென்னை மரங்கள் பட்டுபோயுள்ளன. இதையடுத்து பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி
ப.வேலூர் அருகே பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ப.வேலுார் தாலுகாவில் கொந்தளம் உயர்நிலைப்பள்ளி உள்ளது. ஒன்பது பத்தாம் வகுப்புகளுக்காக பள்ளி செயல்பட்டு வருகிறது. பல மாதங்களாக பள்ளி செயல்படாமல் இருந்ததால் வளாகத்தில் இருந்த பெரும்பாலான தென்னை மரங்கள் பட்டுபோயுள்ளன. இதையடுத்து பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.

நேற்று காலை மரக்கன்றுகள் நடவு செய்ய பணியாளர்கள் குழி பறித்தனர். அப்போது பெரிய அளவிலான மண்பானை ஒன்று தென்பட்டது. பின்னர் அதனை உடையாமல் எடுக்க சுற்றிலும் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பானையை முழுவதுமாக வெளியே எடுத்தனர். அதனுள் மனித எலும்புகள் இருந்தன.ஆசிரியர்கள் ஆய்வு செய்ததில் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு முதுமக்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் தாழி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். இந்த தகவல் கொந்தளம் பகுதி முழுதும் பரவியதால் முதுமக்கள் தாழியை அப்பகுதி மக்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X